Tamil Cinema News
5 நாட்களில் விடாமுயற்சி செய்த வசூல்.. போட்ட காசை எடுத்தாச்சு..!
சமீப காலங்களாகவே தமிழ்நாட்டின் பெரும் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு பெரிதாக வெற்றி படங்களே அமையவில்லை. 2024 துவங்கியப்போது லைகா தயாரிப்பில் வரிசையாக பெரும் பட்ஜெட் படங்களாக உருவாகி வந்தன.
ஆனால் பெரும் பட்ஜெட்டில் உருவானப்போதும் வெளியான படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் போன வருட துவக்கத்தில் லைகா தயாரிப்பில் வெளியான லால் சலாம் அதற்கு பிறகு வெளியான இந்தியன் 2 இரண்டு திரைப்படங்களுமே பெரிதாக வசூல் செய்யவில்லை.
அதன் பிறகு வெளியான வேட்டையன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று கொடுத்தது. தொடர்ந்து தற்சமயம் லைகா தயாரிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் திரைப்படம் தரத்தில் இருப்பதாக தொடர்ந்து இதுக்குறித்து கருத்துக்கள் இருந்து வருகின்றன.
பொதுவாக தமிழ் படங்களில் தெலுங்கு படங்களை போல ஒரே நேரத்தில் 50 பேரை அடிக்கும் சண்டை காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் அப்படி எல்லாம் இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் சண்டை காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியான 5 நாட்களில் 135 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 200 கோடி என கூறப்படுகிறது. ஏற்கனவே ஓ.டி.டி மற்றும் சேட்டிலைட் உரிமம் மூலம் படம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.
எனவே இனி படத்தில் கிடைக்கும் வசூல் எல்லாம் லாபம்தான் என ஒரு பக்கம் கூறப்படுகிறது.
