Connect with us

பாஜாகவிற்கு மட்டும் ஓட்டு போட்டுடாதீங்க!.. வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ!..

vijay sethupathi bjp

News

பாஜாகவிற்கு மட்டும் ஓட்டு போட்டுடாதீங்க!.. வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ!..

Social Media Bar

Vijay Sethupathi: தமிழ் சினிமா நடிகர்களில் வளர்ந்து வரும் நடிகராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார். அடுத்து அஜித்தும் விஜய்யும் சினிமாவை விட்டு விலகப் போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. விஜயை பொறுத்த வரை 90 சதவீதம் அது உறுதியாகிவிட்டது.

ஆனால் அஜித்தை பொறுத்தவரை உறுதியான எந்த தகவல்களும் தெரியவில்லை. இருந்தாலும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு அஜித் சினிமாவை விட்டு வெளியேறி விடுவார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

vijay-sethupathi
vijay-sethupathi

இந்த நிலையில் அந்த இடத்தை தனுஷும் விஜய் சேதுபதியும் தான் பிடிப்பார்கள் என்பது நிறைய பேரின் ஆசையாக இருக்கிறது. ஏனெனில் இப்போது இருக்கும் தமிழ் சினிமா நடிகர்களிலேயே ஓரளவு நடிப்பில் வித்தியாசம் காட்ட கூடியவர்களாக விஜய் சேதுபதியும் தனுஷும் இருக்கின்றனர்.

விஜய் சேதுபதியை பொருத்தவரை திரைப்படத்தில் மட்டுமல்லாது அவர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளிலும் கூட அறிவார்ந்த பல விஷயங்களை பேசுவதால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு. தொடர்ந்து அவர் பேசும் பல விஷயங்கள் சிந்திக்க கூடியவையாக இருக்கும்.

அரசியல் குறித்து விஜய்சேதுபதி:

இந்த நிலையில் பலமுறை இளைஞர்களை நேரில் சந்தித்து நிறைய பேட்டிகளை கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அப்படி ஒருமுறை அவர்களை சந்திக்கும் போது விழிப்புணர்வுக்காக விஜய் சேதுபதி சொன்ன ஒரு விஷயம் தற்சமயம் வைரல் ஆகி வருகிறது.

அதில் விஜய் சேதுபதி பேசும்போது நமது ஊருக்காக போராடலாம் நாட்டுக்காக போராடலாம் மாநிலத்திற்காக போராடலாம் என்று ஒரு கட்சிக்கு ஓட்டு போட அழைத்தால் அந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் தவறில்லை. ஆனால் நம் சாதிக்காக வந்து ஓட்டு போடு, மதத்திற்காக வந்து ஓட்டு போடு என்று கேட்பவர்களிடம் ஓட்டு போடாதீர்கள்.

அவர்கள் உங்களை சிக்கலில் கோர்த்துவிட்டு அவர்கள் தங்கள் வீட்டில் சந்தோஷமாக இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தியாவிலேயே தற்சமயம் மதம் ரீதியான ஒரு கட்சியாக பார்க்கப்படுவது பாரதிய ஜனதா கட்சி தான் எனவே அந்த கட்சியைதான் விஜய் சேதுபதி மறைமுகமாக கூறியிருக்கிறார் என்று கூறி தற்சமயம் அந்த வீடியோ இணையத்தில் ட்ரண்டாகி வருகிறது. 

To Top