Cinema History
பாட்டுக்கு வரியை மட்டும் எழுதிட்டு மியுசிக் போட சொன்னாங்க!.. ஆடி போன விஜய் ஆண்டனி!..
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் விஜய் ஆண்டனி. பொதுவாக புதிதாக இசையமைக்க வரும் இசையமைப்பாளர்களுக்கு சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருக்கும்.
உதாரணமாக ஹிப் ஹாப் ஆதி போன்றவர்கள் எல்லாம் சினிமாவிற்கு வந்தப்போது அவரும் சினிமாவில் இசையமைக்க கஷ்டப்பட்டார்.
விஜய் ஆண்டனி சவுண்ட் இஞ்சினியராக இருந்து பிறகு சுக்கிரன் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளர் ஆனவர். முதலில் அவருக்கு இசையமைப்பது கடினமாக இருந்தாலும் அதற்கடுத்து அவர் இசையமைத்த டிஸ்யூம் திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் கொடுத்தன.
அதற்கு பிறகு காதலில் விழுந்தேன் என்கிற படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் விஜய் ஆண்டனி. அப்போது நாக்கு முக்க பாட்டிற்கு அந்த பாடலின் வரிகளை ஏற்கனவே எழுதி கொடுத்துவிட்டனர். இந்த வரிகளுக்கு ஏற்றாற் போல இசையமைக்க வேண்டும் என கூறிவிட்டனர்.
பொதுவாக இசையமைப்பாளர் முதலில் இசையமைப்பார்கள். பிறகு அதற்கு தகுந்தாற் போலதான் பாடல் வரிகளை எழுதுவார்கள். இந்த நிலையில் பாடலாசிரியர் இப்படி ஒரு கடினமான விஷயத்தை கொடுத்தது விஜய் ஆண்டனிக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும் மனம் தளராமல் சிறப்பான பாடல் ஒன்றை தயாரித்தார் விஜய் ஆண்டனி.
