Connect with us

சின்ன உதவி கேட்டு வந்த விஜயகாந்த் மகனுக்கு பெரிய உதவி செய்த விஜய்!.. நன்றிகடன் செய்யும் நேரம் இது!..

vijay shanmuga pandian

News

சின்ன உதவி கேட்டு வந்த விஜயகாந்த் மகனுக்கு பெரிய உதவி செய்த விஜய்!.. நன்றிகடன் செய்யும் நேரம் இது!..

Social Media Bar

சினிமாவிற்கு வந்த ஆரம்பக் காலக்கட்டங்களில் விஜய்க்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. அப்போது விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இருந்தார். ஏனெனில் அவர் விஜயகாந்தை வைத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்திருப்பார்.

இந்த நிலையில் விஜயகாந்தோடு சேர்ந்து விஜய் நடித்து வெளியான செந்தூர பாண்டி திரைப்படம் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அப்போது விஜய்க்கு விஜயகாந்த் செய்த உதவி பெரும் உதவியாகும். அதற்கு கைமாறு செய்யும் விதமாக தற்சமயம் விஜய் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு உதவ முன் வந்துள்ளார்.

தற்சமயம் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படைத்தலைவன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட வேண்டும் என விஜய்யிடம் கேட்டுள்ளார் சண்முக பாண்டியன்.

அதற்கு பதிலளித்த விஜய் படைத்தலைவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தருவதாக வாக்கு கொடுத்துள்ளாராம். மேலும் தளபதி 69 திரைப்படத்திலும் சண்முக பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுக்க வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது.

To Top