விஜய் அதை எனக்கு மட்டும்தான் பண்ணுனாரு… பெருமையாக கூறிய விஷால்!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். ஆனால் சமீபமாக வந்த அவரது திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெகுவாக வரவேற்பை பெற்றது. பலரும் அந்த படத்தை குறித்து நல்ல வகையில் விமர்சனம் அளித்து வருகின்றனர். நடிகர் விஷாலுக்கு ஒரு கம் பேக் திரைப்படமாக இது அமைந்துள்ளது.

இந்த படத்தின் போஸ்டரை வெளியிடும்போது அதை நடிகர் விஜய் வெளியிட்டால் நன்றாக இருக்குமே என நினைத்துள்ளார் விஷால். ஆனால் பொதுவாக விஜய் இந்த மாதிரி போஸ்டர் வெளியிடுவது போன்ற விஷயங்களை செய்வதில்லை.

எனவே விஷாலுக்கு தெரிந்தவர்களே இதுக்குறித்து கூறும்போது வேண்டாம் விஜய்யிடம் கேட்காதீர்கள். அவர் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என கூறிவிட்டனர். இருந்தாலும் பரவாயில்லை என விஜய்யிடம் கேட்டுள்ளார் விஷால். உடனே வீட்டிற்கு கிளம்பி வர சொல்லியுள்ளார் விஜய்.

வீட்டிற்கு வந்த விஷாலிடம் நல்ல வகையில் பேசி அந்த போஸ்டரையும் ரிலீஸ் செய்து தந்துள்ளார் விஜய்.