Connect with us

விஜய் படத்தில் இசையமைக்கப்பட்டு டெலிட் செய்யப்பட்ட 5 பாடல்கள்

vijay thumb

Cinema History

விஜய் படத்தில் இசையமைக்கப்பட்டு டெலிட் செய்யப்பட்ட 5 பாடல்கள்

Social Media Bar

திரைப்படங்களில் படமாக பாடுவதில் துவங்கி படம் வெளியாவது வரை அதில் பல மாற்றங்கள் நிகழும் கால்வாசி மாற்றங்கள் நிகழ்ந்த பிறகு இருக்கும் கடைசி அவுட்புட்டைதான் நாம் திரைப்படங்களாக பார்க்கிறோம்.

எனவே ஒரு திரைப்படத்தை நாம் பார்க்கிறோம் என்றால் அதில் எக்கச்சக்கமான காட்சிகள் பாடல்கள் என பழவை நீக்கப்பட்டிருக்கும் அவற்றையே ஒரு தனி படமாகவே விடலாம் என்கிற அளவிற்கு நீக்குதல் நடந்திருக்கும்.

எனவே அப்படி பெரும் நடிகர்கள் படத்திலும் நடந்திருக்கிறது முக்கியமாக விஜய் படத்தில் அதிகமாக பாடல்கள் இப்படி நீக்கப்பட்டு இருக்கின்றன அப்படி விஜய் படத்தில் டெலிட் செய்யப்பட்ட ஐந்து பாடல்களை இப்பொழுது பார்க்கலாம்.

சச்சின் திரைப்படத்தை பொருத்தவரை இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். அதில் ஒரு பாடல் மட்டும் படத்திலேயே வரவில்லை அடடே கட்டிக்கோடா பசை போட்டு ஒட்டிக்கோ டா என்று ஒரு ஐட்டம் பாடலை இசையமைத்து இருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். ஆனால் திரைப்படத்தில் அந்த பாடல் வெளியாகவில்லை.

அதேபோல ஆதி திரைப்படத்திலும் இசையமைப்பாளர் வித்யாசாகர். இசையமைப்பில் ஒரு பாடல் உருவானது வரான் வரான் ஆதி வந்தா தெரியும் சேதி என்கிற அந்த பாடல் கொஞ்சம் சுமாராக இருக்கிறதே என்று அந்த பாடலை படத்திலிருந்து நீக்கி விட்டனர்.ஆனால் அந்த பாடல் தான் ஹீரோவிற்கான என்ட்ரி பாடலாக அந்த படத்தில் இருந்தது.

அதே மாதிரி விஜய் ஆண்டனி இசையில் வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு இசையமைக்கும் பொழுது அதில் புலி உறுமுது பாடலுக்கும் முன்பு வேட்டைக்காரன்ட்டோய் என்கிற ஒரு பாடலை இசையமைத்தார் விஜய் ஆண்டனி. ஆனால் அந்த பாடல் அவ்வளவு நன்றாக இல்லை என்று படத்தில் நீக்கிவிட்டனர் ஆனால் படம் வெளியாவதற்கு முன்பு சில நாட்கள் அந்த பாடல் கொஞ்சம் பிரபலமாகவே இருந்தது.

அடுத்ததாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துப்பாக்கி திரைப்படத்தில் போடப்பட்ட ஊர் என்ன பெயர் என்ன கேட்டுக்கோ என்கிற ஒரு பாடல் நீக்கப்பட்டது. அந்த பாடலும் அந்த படத்தில் விஜய்க்கு என்ட்ரி பாடலாக இருந்த பாடலாகும். பிறகு அதற்கு பதிலாக குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம் என்கிற பாடல் வைக்கப்பட்டது.

அதேபோல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் புலி திரைப்படத்தில் போடப்பட்ட மனிதா மனிதா தன்மான மனிதா என்கிற பாடல் நீக்கப்பட்டது இந்த பாடலும் கூட விஜய்க்கு டைட்டில் பாடலாக வைக்கப்பட்டது பிறகு அது நீக்கப்பட்டது.

To Top