ஒரு ஹீரோயினோடு ஒரு முறை மட்டும்தான்!.. புது விதிமுறை போட்ட விஜய் சேதுபதி..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து பெரும் வெற்றிகளை கொடுத்து வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆனால் சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்கள் எதுவுமே அவ்வளவாக வெற்றி பெறுவதில்லை.

அதே சமயம் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. மேலும் அவை நல்ல வெற்றியும் பெற்று தருகின்றன உதாரணத்திற்கு அவர் நடித்த மாஸ்டர், விக்ரம் மாதிரியான திரைப்படங்களில் அவரது வில்லன் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது.

வாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனை:

அதேபோல சம்பள விஷயத்திலும் தற்சமயம் கதாநாயகனாக நடிப்பதை விடவும் வில்லனாக நடிப்பதற்கு அவருக்கு அதிக சம்பளம் கிடைத்து வருகிறது. இதனை அடுத்து தொடர்ந்து விஜய்சேதுபதி தனது ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

Social Media Bar

இந்த மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் வெற்றி பெறுமா? என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில் விஜய்சேதுபதியை தற்சமயம் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கிறது.

விஜய் சேதுபதியின் முடிவு:

இந்த நிலையில் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி உறுதியாக கூறிவிட்டாராம். ஏனெனில் தொடர்ந்து தன்னை வில்லனாக மாற்றி விடுவார்களோ என்கிற பயம் விஜய் சேதுபதிக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதைப்போல ஒரு திரைப்படத்தில் ஒரு கதாநாயகியுடன் நடித்த பிறகு அதே கதாநாயகியுடன் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று புது விதிமுறையை கொண்டு வந்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. எனவே ஒவ்வொரு திரைப்படத்திலும் புதுப்புது கதாநாயகிகளுடன் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இனிவரும் காலங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க மாட்டார் என்பதால் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் திரைப்படத்திலும் அவர் இனி வில்லனாக வருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.