Latest News
எஸ்.ஏ சி குறை கூறி மறுத்த திரைப்படம் அது.. மாஸ் ஹிட் கொடுத்துச்சு.. சீக்ரெட்டை கூறிய தயாரிப்பாளர்.!
விஜய் நடித்த திரைப்படங்களில் நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றன. அதேபோல நிறைய திரைப்படங்கள் தோல்வியும் கொடுத்திருக்கின்றன. துள்ளாத மனமும் துள்ளும் காலகட்டத்தில் இருந்து விஜய் நடிக்கும் திரைப்படங்களின் கதையை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர்தான் கேட்பார்.
ஏனெனில் துள்ளாத மனமும் துள்ளும் கதையையும் அவர்தான் கேட்டார் கேட்ட பிறகு அதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எஸ்.ஏ சந்திரசேகர்தான் நினைத்தார்.
கதை தேர்ந்தெடுத்த தந்தை:
அந்த திரைப்படம் விஜய்க்கு எப்படியான ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனால் வெகு நாட்கள் விஜயின் கதைகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் எஸ்.ஏ சந்திரசேகர்தான் இருந்தார்.
ஆனால் சில நேரங்களில் நல்ல வெற்றி படங்களையும் கூட எஸ்.ஏ சந்திரசேகர் நிராகரித்த சம்பவமும் நடந்திருக்கிறது. அப்படி அவர் நிராகரித்த திரைப்படங்களில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படமும் ஒன்று துப்பாக்கி திரைப்படத்தின் கதையை ஏ.ஆர் முருகதாஸ் கூறிய பொழுது அந்த திரைப்படத்தை தானே தயாரிப்பதாக முன் வந்திருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகர்.
படத்தின் தயாரிப்பு வேலை துவங்கும் சமயத்திலேயே முருகதாஸ்க்கும் எஸ் ஏ சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது கதையில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று எஸ்.ஏ சந்திரசேகர் கேட்டுள்ளார்.
பிறகு வந்த பிரச்சனை:
ஆனால் அதற்கு ஏ.ஆர் முருகதாஸ் மறுத்திருக்கிறார் இந்த நிலையில் அந்த திரைப்படம் பிறகு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் கைக்கு வந்தது. அந்த படத்தின் ஒன்லைன் படைத்த உடனே இது சிறப்பான வெற்றியை கொடுக்கும் படம் என்று கூறி அந்த படத்தின் கதையை கேட்காமலேயே அதற்கு தயாரிப்பு செலவுகளை செய்தர் கலைப்புலி எஸ் தானு.
அந்த திரைப்படமும் அதற்கு ஏற்றார் போல பெரும் வெற்றியை கொடுத்து விஜய்க்கு முக்கியமான ஒரு திரைப்படமாக அமைந்தது.