Connect with us

ஊதுப்பத்தி கொழுத்துறதுக்குள்ள கடைல அலப்பறை.. கடுப்பாகி கேப்டன் செய்த வேலை!.. பகிர்ந்த காமெடி நடிகர்..!

bava lakshmanan

News

ஊதுப்பத்தி கொழுத்துறதுக்குள்ள கடைல அலப்பறை.. கடுப்பாகி கேப்டன் செய்த வேலை!.. பகிர்ந்த காமெடி நடிகர்..!

Social Media Bar

எம்ஜிஆர்க்கு பிறகு தமிழ் சினிமாவில் மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்தவராக அறியப்படுபவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் இறந்த பிறகுதான் அவரை பற்றிய நிறைய விஷயங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கின.

விஜயகாந்துடன் பணிபுரிந்த பலரும் கூட அவரைக் குறித்து நிறைய விஷயங்களை பகிர துவங்கினர். விஜயகாந்த் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அங்கு பணிபுரிபவர்களுக்கு நல்ல சாப்பாடு இருக்க வேண்டும் என்பதில் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்.

vijayakanth1
vijayakanth1

அப்படி ஒரு வேளை சாப்பாடு சரியில்லை என்றால் அவரே அந்த படப்பிடிப்பில் சாப்பிட மாட்டார் மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டார் வெளியில் இருந்தாவது காசு கொடுத்து சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட வைப்பாராம்.

விஜயகாந்த் உதவி:

அது போல படம் வெற்றி அடைந்தாலும் அந்த படத்தில் நடித்தவர்களுக்கு நன்மைகள் செய்யக்கூடியவராக இருந்திருக்கிறார் விஜயகாந்த். இந்த நிலையில் வானத்தபோல திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயகாந்த் செய்ததை குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் பவா லட்சுமணன்.

இவர் பிரபலமான காமெடி நடிகர் அவர் வானத்தைப்போல திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்பொழுது படத்தில் நடித்த சின்ன நடிகர்களை எல்லாம் அழைத்த விஜயகாந்த் பக்கத்தில் இருக்கும் ஒரு ஜவுளி கடை பெயரை கூறி அங்கு சென்று ஐயாயிரம் ரூபாய்க்கு உங்களுக்கு வேண்டிய ஆடைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஜவுளிக்கடை சம்பவம்:

Vijayakanth-1-1
Vijayakanth-1-1

அதற்கான பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறார் சரி என்று அவர்களும் அங்கு சென்ற பொழுது கடையை திறக்காமல் இருந்திருக்கிறது.

இதனை பார்த்து விஜயகாந்துக்கு போன் செய்த அவர்கள் சார் இன்னும் கடையே திறக்கவில்லை என கூறியிருக்கின்றனர். உடனே சத்தம் போட்ட விஜயகாந்த் மதுரைக்காரன் என்பதை காட்டிவிட்டீர்களே என்று திட்டிவிட்டு திரும்ப வரும்படி கூறிவிட்டார்.

திரும்ப அவர்கள் சென்ற பிறகு டெய்லர் ஒருவரை அழைத்து அவர்களுடைய ஆடை அளவுகளை எடுத்துக்கொண்டு எல்லாம் வீட்டுக்கு போங்க நானே ட்ரெஸ்ஸை வாங்கி அனுப்புறேன் என்று கூறினார் விஜயகாந்த் அதேபோல அவரே வாங்கி அனுப்பி வைத்தார் என்று கூறுகிறார் பவா லெட்சுமணன்.

To Top