தமிழ் சினிமாவில் செல்வாக்கு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களாகவே இருந்து வருகின்றன.
லியோ திரைப்படத்திற்கு பிறகு அடுத்து ரஜினியை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் கதையை விரிவாக்கம் செய்வதற்காக சில மாதங்களை எடுத்துக்கொண்டார் லோகேஷ் கனகராஜ்.
இதற்கு நடுவே வேட்டையன் திரைப்படத்திலும் நடிக்க வேண்டி இருந்ததால் தற்சமயம் அந்த வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். லோகேஷ் அவர் இயக்கும் திரைப்படங்களில் பொதுவாக அந்த நடிகர்களின் பழைய திரைப்படங்களில் இருந்து நாஸ்டாலஜியான விஷயங்களை எடுத்து பயன்படுத்திவிடுவார்.

அந்த வகையில் ரஜினிகாந்திற்கு ப்ரோமோவிலேயே அந்த வேலையை பார்க்க துவங்கிவிட்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் நான் கூலி திரைப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறினேன். அந்த கதையை கேட்ட விஜய் பொதுவாக 10 நிமிடத்தில் கேட்கும் எந்த கதையும் எனக்கு பிடித்தது கிடையாது.
ஆனால் உன் கதை நல்லா இருக்கு என கூறினார். அதே போல ரஜினிகாந்தும் லோகேஷிடம் கதையின் சுருக்கத்தை கேட்டே நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் இதுவரை ரஜினிகாந்தை பார்க்காத ஒரு புது கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள் என கூறியுள்ளார் லோகேஷ்.






