News
கேரளாவில் சம்பவம் செய்ய நாங்க ரெடி! களமிறங்கும் கௌதம் மேனன் !
கடந்த சில காலங்களாகவே தமிழ்நாட்டில் மலையாள சினிமாவின் ஹைப் அதிகமாகவே காணப்படுகிறது. கேரளாவில் கிடைக்கக்கூடிய வரவேற்பை விட தமிழ்நாட்டில் மலையாள படங்களுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது.
அந்த வகையில் சமீப காலங்களில் வெளியான காதல் தி கோர், பிரம்மயுகம், பிரேமாலு படங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்த நிலையில், தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழர்களின் பேராதரவுடன் திரையங்குகளில் களைகட்டுகிறது.சொல்லப் போனால், கேரளாவைகாட்டிலும் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்து வருகிறது இந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் சம்பவம் செய்துவரும் மல்லு படங்களுக்கு, சற்றும் இளைத்ததல்ல தமிழ்படங்கள் என கேரளாவில் சம்பவம் செய்ய தயாராக இருக்கிறது இந்த தமிழ்ப் படம்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க, நடிகர் சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2010-ல் வெளியானது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. முழுக்க முழுக்க காதல் ஜானரல் உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புஅதிகம் தான்.அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அதிகப்படியான திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இன்றும் திரையரகுகளில் ரசிகர்கள் பட்டாளம் குறைந்த பாடில்லை.

இந்த நிலையில், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ஸ்டேட் விட்டு ஸ்டேட் தாண்ட தயாராகி விட்டது. வருகின்ற மார்ச் 15ஆம் தேதி கேரளாவில் இருக்கும் திரையரங்குகளில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்த கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மலையாள படங்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு அமோகமாக இருக்க, கேரளாவில் தமிழ் படத்தின் மவுசு எப்படி என பொருத்துருந்து பாத்துட்டா போச்சு.
