Connect with us

விஷால் மேல அன்பு வந்துட்டு!.. வாய்ப்பு கொடுத்தானா படம் பண்ணுவேன்!.. பல்டி அடித்த மிஸ்கினுக்கு விஷால் சொன்ன பதில்!..

News

விஷால் மேல அன்பு வந்துட்டு!.. வாய்ப்பு கொடுத்தானா படம் பண்ணுவேன்!.. பல்டி அடித்த மிஸ்கினுக்கு விஷால் சொன்ன பதில்!..

Social Media Bar

Mysskin and Vishal: விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் இடையே பஞ்சாயத்து துவங்கியது துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் துப்பறிவாளன். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்துதான் துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கப்பட்டது. ஏனெனில் துப்பறிவாளன் கதையின் அடித்தளமான ஷெர்லாக் ஹோம்ஸ் கதை லண்டனில்தான் நடக்கும்.

ஆனால் எதனாலோயோ மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டது. இதனையடுத்து பொது வெளியில் விஷாலை மோசமாக திட்டினார் மிஸ்கின். இதற்கு மிஸ்கின் தரப்பில் கூறும்போது 2 கோடி சம்பளம் அதிகமாக கேட்டதே இருவருக்கும் சண்டை வருவதற்கு காரணம் என கூறுகிறார்.

thuparivaalan 2
thuparivaalan 2

ஆனால் விஷால் கூறும்போது படத்திற்கு தேவையில்லாமல் நிறைய செலவுகளை மிஸ்கின் செய்ததே காரணம் என்கிறார். இதனால் இப்போதுவரை துப்பறிவாளன் முழு படமாக மாறமலே இருக்கிறது. இதுக்குறித்து சமீபத்தில் மிஸ்கின் பேசும்போது விஷால் மீது எனக்கிருந்த கோபம் எல்லாம் போய்விட்டது.

அதற்கு பதிலாக அவன் மீது முன்பிருந்த அன்பு வந்துவிட்டது. எனவே திரும்ப படம் பண்ண கூப்பிட்டால் நான் செல்வேன் என மிஸ்கின் கூறியுள்ளார். ஆனால் அதே கேள்வியை விஷாலிடம் கேட்கும்போது மிஸ்கின் மட்டும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை எடுத்திருந்தால் பிறகு விஷால் பிலிம் பேக்டரியே இல்லாமல் போயிருக்கும்.

அவர் எனக்கு செய்த துரோகத்தை மன்னிக்கவே முடியாது எனவே நாங்கள் ஒன்றினைவதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என கூறியுள்ளார் விஷால்.

Source – Link

To Top