Connect with us

கில்லி ரீ ரிலிஸில் கால்வாசியை கூட தொடலை!.. ரத்னம் முதல் நாள் வசூல்!..

vishal vijay ghilli

News

கில்லி ரீ ரிலிஸில் கால்வாசியை கூட தொடலை!.. ரத்னம் முதல் நாள் வசூல்!..

Social Media Bar

கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் விஷால் நடித்த மார்க் ஆண்டனி முதல் நாளே 7 கோடி வரை வசூல் செய்த மார்க் ஆண்டனி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஓடி பெரும் வெற்றியை கொடுத்தது.

அதே போல ஒரு வெற்றியை கொடுக்கும் என்கிற ஆசையில் விஷால் நடித்த திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். நடிகை ப்ரியா பவானி சங்கர் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரி விஷால் கூட்டணியில் இந்த திரைப்படம் மூன்றாவது திரைப்படமாகும்.

vishal rathnam
vishal rathnam

இதற்கு முன்பே தாமிரபரணி, பூஜை ஆகிய இரு திரைப்படங்களில் நடித்துள்ளார் விஷால். அந்த இரு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்த படங்களாக இருந்தன. ஆனால் ரத்னம் திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

முதல் நாளே இந்த படம் 2.30 கோடிதான் வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. சின்ன திரைப்படங்களுக்கு இந்த தொகை பெரிதாக இருக்கலாம் ஆனால் விஷால் மாதிரியான கதாநாயகர்களை பொறுத்தவரை இது மிக குறைவான தொகையாகும்.

கில்லி திரைப்படம் 100 ரூபாய் 120 ரூபாய் டிக்கெட் விலை வைத்தே முதல் நாள் 10 கோடி ரூபாய் வசூல் செய்தது கில்லி திரைப்படம். ஆனால் வழக்கமான டிக்கெட் விலையில் கூட கில்லியின் முதல் நாள் வசூலை ரத்னம் திரைப்படம் தாண்டவில்லை.

To Top