Connect with us

நான் டைவர்ஸ் வாங்குனேன்னு எல்லாரும் திட்டுறாங்க!.. ஆனா உண்மை என்ன தெரியுமா?.. மனம் திறந்த விஷ்ணு விஷால்!.

vishnu vishal

News

நான் டைவர்ஸ் வாங்குனேன்னு எல்லாரும் திட்டுறாங்க!.. ஆனா உண்மை என்ன தெரியுமா?.. மனம் திறந்த விஷ்ணு விஷால்!.

Social Media Bar

Actor Vishnu vishal : தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அவர் தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் தான் தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது.

அவர் நடித்த வெண்ணிலா கபடி குழு திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆகும். ஆனால் அதற்குப் பிறகு வந்த குள்ளநரி கூட்டம் ராட்சசன் போன்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட திரைப்படங்கள் ஆகும்.

இதனால்தான் தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்சமயம் அவர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்திற்க்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் அவரது சொந்த வாழ்க்கையை பொருத்தவரை அவரது முதல் மனைவியுடன் அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டது.

vishnu-vishal
vishnu-vishal

இது தொடர்பாக பலமுறை அவரை சமூக வலைதளங்களில் மக்கள் திட்டியுள்ளதாக விஷ்ணு விஷால் ஒரு பேட்டியில் கூறுகிறார். அவர் கூறும் பொழுது என்னை திட்டுபவர்கள் யாருக்கும் எனது சொந்த வாழ்க்கை பற்றி துளி கூட தெரியாது.

விவாகரத்துக்காக நானும் எனது மனைவியும் நீதிமன்றத்தில் நின்ற பொழுது விவாகரத்து வேண்டுமா என்று நீதிபதி கேட்டார் அப்பொழுது நான் வாயை திறக்கவில்லை எனது மனைவிதான் விவாகரத்து வேண்டும் என்று கூறினார் எனக்கு விவாகரத்து வாங்குவதில் விருப்பமே இல்லை. ஆனால் அதெல்லாம் தெரியாத இந்த மக்கள் எப்போதும் எனது தனிப்பட்ட வாழ்வை குறித்து தவறாக பேசி வருகின்றனர் என்று கூறியிருக்கிறார் விஷ்ணு விஷால்.

To Top