Connect with us

சாதிச்சுட்டு வா சந்திச்சுக்கலாம்!.. மைக்கேல் ஜாக்சனிடம் சொன்ன வார்த்தையை நிறைவேற்றிய ஏ.ஆர் ரகுமான்!..

AR rahman micheal jackson

Cinema History

சாதிச்சுட்டு வா சந்திச்சுக்கலாம்!.. மைக்கேல் ஜாக்சனிடம் சொன்ன வார்த்தையை நிறைவேற்றிய ஏ.ஆர் ரகுமான்!..

Social Media Bar

AR Rahman: தமிழில் இசை புயல் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். அதற்கு ஒரு காரணமும் உண்டு. தமிழ் சினிமாவில் பல நாட்களாக பெரும் இசையமைப்பாளராக இருந்து வந்தவர் இளையராஜா.

இளையராஜா இசையமைத்தாலே அந்த படம் பெறும் வெற்றியடையும் என ஒரு நம்பிக்கை உண்டு. இப்போதும் பலரும் கூறும்போது ராமராஜனின் திரைப்படங்கள் பெரும் வெற்றியை காண்பதற்கு காரணமாக அமைந்தது இளையராஜாவின் இசைதான் என்று கூறுகின்றனர்.

அப்படி 500க்கும் அதிகமான படங்களில் 5000க்கும் அதிகமான பாடல்களை இசையமைத்த பிறகுதான் இளையராஜாவிற்கு போட்டியாக ஏ.ஆர் ரகுமான் களம் இறங்கினார். வந்த உடனேயே ஏ.ஆர் ரகுமானின் இசைக்கு பெரும் வரவேற்பு வந்தது.

இதற்கு முன்பு தமிழ் மக்கள் கேட்டிராத வகையில் மிகவும் புதிதாக இருந்தது ஏ.ஆர் ரகுமான் பாடல்கள். இதனையடுத்து வெகு சீக்கிரமாகவே இளையராஜாவின் மார்க்கெட் குறைய துவங்கியது. புயல் போல வந்து தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்ததால் இசைபுயல் என்று இவர் அழைக்கப்படுகிறார்.

எவ்வளவோ வளர்ச்சியை அடைந்தப்போதும் மைக்கேல் ஜாக்சனை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஒரு ஆசை ஏ.ஆர் ரகுமானுக்கு இருந்தது. இதற்காக அப்பொழுது எவ்வளவோ முயற்சி செய்தார். அந்த சமயத்தில் மைக்கேல் ஜாக்சன் ஏ.ஆர் ரகுமானுக்கு ஒரு செய்தியை சொல்லி அனுப்பினார். அதாவது ஏதாவது ஒரு சாதனையை செய்துவிட்ட்டு வந்தால்தான் மைக்கேல் ஜாக்சனை சந்திக்க முடியும்.

இதை கேட்டதும் ஏ.ஆர் ரகுமான் ஒரு முடிவெடுத்தார். ஏதாவது பெரிதாக சாதனை செய்துவிட்டுதான் மீண்டும் மைக்கேல் ஜாக்சனை சந்திக்க வேண்டும். அதன்படி 2008 ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லயனர் திரைப்படத்திற்காக 22 பிப்ரவரி 2008 அன்று ஏ.ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

இதனை தொடர்ந்து மைக்கேல் ஜாக்சனை சந்திக்க விரும்பினார் ஏ.ஆர் ரகுமான். இந்த முறை அவர் ஆஸ்கர் விருது வாங்கியிருந்ததால் அமெரிக்காவிற்கே அவரை தெரிந்திருந்தது. உடனே அவரை வீட்டுக்கு அழைத்து வரவேற்ற மைக்கேல் ஜாக்சன் அவரிடம் சந்தோஷமாக பல மணி நேரங்கள் பேசியுள்ளார். இப்படி மாஸ் காட்டி மைக்கேல் ஜாக்சனை நேரில் சந்தித்துள்ளார் ஏ.ஆர் ரகுமான்,

To Top