Cinema History
ஸ்டண்ட் மாஸ்டரை கலாய்ச்சதுனால கட்டி தொங்க விட்டாங்க!.. சிம்பு படத்தில் காமெடி நடிகருக்கு நடந்த சம்பவம்..
Simbu Movie : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் என கூறலாம். அவை அனைத்துமே வெங்கட் பிரபுவின் இயக்கத்தை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தும் திரைப்படங்களாக இருந்துள்ளன.
அதில் முக்கியமான இரண்டு படங்கள் என்றால் அதில் ஒன்று மங்காத்தா இன்னொன்று மாநாடு. மாநாடு திரைப்படம்தான் தமிழ் சினிமாவில் முதன்முதலில் வந்த டைம் லூப் திரைப்படம் ஆகும். ஒரே சம்பவம் திரும்பத் திரும்ப குறிப்பிட்ட காலத்திற்குள் நடந்து கொண்டே இருப்பதே டைம் லூப் என அழைக்கப்படும்.
ஆனால் அதை தமிழில் எடுப்பதில் உள்ள சிரமம் என்னவென்றால் திரும்பத் திரும்ப நடந்த காட்சிகளே நடக்கும்பொழுது அது மக்களுக்கு பொறுமையை இழக்க செய்யும். ஆனாலும் கூட அதை சுவாரஸ்யமாக செய்து காட்டியிருந்தார் வெங்கட் பிரபு.
படத்தில் நடந்த சம்பவம்:
முக்கியமாக அப்படியான ஒரு கதையை மக்களுக்கு புரிய வைத்திருந்தார் வெங்கட் பிரபு. இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் படவா கோபி நடித்திருந்தார். காமெடி நடிகராக பயணம் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் அவரது நடிப்பை பார்த்திருக்க முடியும்.
மாநாடு திரைப்படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்திருந்தார். அப்பொழுது ஒரு நாள் ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது ரொம்ப மழை பெய்ய துவங்கி விட்டது. மாநாடு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் நிறைய முடி வைத்திருப்பார்.
அவரை வம்புக்கு இழுக்கும் விதமாக உங்கள் முடியை கொஞ்சம் கொடுத்தீர்கள் என்றால் மழைக்கு அதில் ஒதுங்கிக் கொள்வேன் என்று கிண்டல் செய்திருக்கிறார் படவா கோபி. இதை கேட்டுக் கொண்டிருந்த சிம்பு இவருக்கு வாய் அதிகமாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் இவரை ஒரு காட்சியில் கட்டி தொங்க விட்டு விடுவோமா என்று பேசியிருக்கிறார்.
சும்மா விளையாட்டுக்காகதான் சிம்பு அப்படி சொல்கிறார் என்று நினைத்து இருந்திருக்கிறார் படவா கோபி. ஆனால் சிம்பு சொன்னது போலவே அப்படி ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கின்றார். இந்த விஷயத்தை பேட்டியில் கூறிய அவர் அன்று மட்டும் வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தேன் என்றால் 25 நிமிடம் தொங்கி இருக்க தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்