Tamil Cinema News
முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. எட்டு முறை போன டேக்.. உண்மையை பகிர்ந்த யோகிபாபு..
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் யோகி பாபு இருந்து வருகிறார்.
தமிழில் பெரிய நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார் யோகி பாபு. இப்போது அவருக்கு நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அதற்கு முன்பே கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. நயன்தாராவிற்கு சமமான ஒரு கதாபாத்திரமாக அதில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இருக்கும்.
இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் யோகிபாபு. உண்மையிலேயே நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் தான். ஏனெனில் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ஒரு காட்சி ஒன்று இருந்தது.
அதில் நயன்தாரா எனது முகத்தில் எட்டி உதைக்க வேண்டும் என்பதாக அந்த காட்சி இருந்தது. ஆனால் நயன்தாரா அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை நெல்சன் வலியுறுத்தி அந்த காட்சியை எடுக்க வேண்டும் என்று கூறியதால் அவர் நடித்தார்.
எட்டு முறை அந்த காட்சி டேக் சென்றது ஆனால் ஒரு முறை கூட நயன்தாராவின் கால் என் மேல் படவில்லை எனது முகத்திற்கு அருகில் காலை கொண்டு வந்து நிறுத்தி விடுவார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் யோகி பாபு.
