Latest News
நான்கே நாட்களில் 1 கோடி வீவ்ஸ்!.. மோடி ஆட்சி குறித்து அலசிய யூ ட்யூப்பர்!.. மக்களுக்கு பயத்தை காட்டிட்டான்ப்பா!..
Youtuber dhruv rathee: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் அதன் ஜனநாயக அமைப்பின் அடிப்படையிலேயேதான் அமைகிறது. எந்த ஒரு நாடு சர்வதிகார ஆட்சிக்கு உட்பட்டு இருக்கிறதோ அந்த நாட்டின் வளர்ச்சியில் பிரச்சனை இருக்கும் என கூறப்படுகிறது.
அதானால்தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தப்போதே இதை ஒரு ஜனநாயக நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல தலைவர்கள் ஒன்று கூடி இந்தியாவை கட்டமைத்தனர். இந்த நிலையில் தற்சமயம் நாம் இருக்கும் இந்தியா ஜனநாயகமான நாடாக இருக்கிறதா? அல்லது சர்வதிகார ஆட்சியின் கீழ் இருக்கிறோமா என்கிற பெரும் கேள்வியை எழுப்பியுள்ளார் யூ ட்யூப்பர் துருவ் ராத்தே.
வட இந்திய யூ ட்யூப்பரான துருவ் ராத்தே அரசியல் மற்றும் சமூகம் சார்ந்து பல விஷயங்களை வீடியோக்களாக பதிவேற்றி வருகிறார். அப்படியாக அவர் மோடி குறித்து மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியிட்ட வீடியோ இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடப்பாதால் மட்டுமே ஒரே நாட்டை ஜனநாயக நாடு என்று கூறிவிட முடியாது என்கிறார் துருவ். தென் கொரியா, ரஷ்யா மாதிரியான சர்வதிகார நாடுகளிலும் தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் எவ்வளவு சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடக்கிறது என்பதை வைத்துதான் அது ஜனநாயக நாடு என்பது முடிவு செய்யப்படும்.
இந்தியாவில் தேர்தல் கமிஷனில் துவங்கி, உளவு துறை, நீதி துறை என அனைத்தும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, நமக்கே தெரியாமல் நாம் சர்வதிகார ஆட்சிக்குள் இருக்கிறோம் என கூறும் துருவ் ராத்தே அதற்கு பல்வேறு சான்றுகளையும் எடுத்து வைக்கிறார். தற்சமயம் இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்