அந்த படத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! யுவன் சங்கர் ராஜாவையே பதற விட்டுட்டாங்க!..
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் தளபதி விஜய் நடிக்கும் GOAT படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர்.
அஜித்தின் நடித்து வெளியான வலிமை படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர் விலகி விட, மற்ற இசை பணிகளை ஜிப்ரான் தான் கவனித்து வந்தார். இந்த நிலையில், ஆர்.கே. சுரேஷ், தான் எழுதி, இயக்கி நடிக்கப் போகும் தென் மாவட்டம் படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த போஸ்டரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘தென் மாவட்டம்’ படத்திற்கு இசையமைக்கப் போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷ் பெயர் அடிபட்ட நிலையில், அவரது இயக்கத்தில் சாதிய படமாக உருவாகும் தென் மாவட்டம் படத்தில், யுவன் சங்கர் ராஜா இசை என வந்த அறிவிப்பை பார்த்து ஷாக்கான அவர், உடனடியாக அந்த படத்திற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என ட்வீட் போட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா தனது x பக்கத்தில், பத்திரிகை நண்பர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் ஒரு விஷயத்தை க்ளியர் பண்ண விரும்புறேன். நான் இந்த படத்தில் பணியாற்றவில்லை. யாரும் இதுவரை பணியாற்ற வேண்டும் என அணுகவும் இல்லை என அதிரடியாக ட்வீட் ஒன்றை போட்டு ஆர்.கே. சுரேஷுக்கு ஆப்படித்தார்.
இதை பார்த்த நெட்டிசங்கள், கோட் படத்தின் அந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஏதாவது ஒரு அப்டேட்டை தட்டி விடுங்க பாஸ் என கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர்.