சினிமாவில் சில திரைப்படங்கள் பெரும் வெற்றியை கண்டுவிட்டால் அந்த திரைப்படத்தை ரீமேக் செய்வது வழக்கமாக இருக்கும். ஹிந்தியில் ஒரு படம் பெரும் வெற்றியை கொடுத்தால் அந்த படத்தை திரும்ப தமிழில் படமாக்குவார்கள்.
பிறகு தெலுங்கில் படமாக்குவார்கள் இப்படி ஒரு படம் வெற்றியை கொடுத்து விட்டால் அந்த படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்வது என்பது இப்போது வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒரே திரைப்படத்தை கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு மொழிகளில் ரீமேக் செய்திருக்கின்றனர்.
தமிழில் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. தமிழில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமாக இது இருந்தது. இந்த திரைப்படத்தை விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டிலும் படமாக்கலாம் என்று திட்டமிடப்பட்டது.

எனவே அந்த கானூன் என்கிற பெயரில் 1983ல் இதே கதை ரஜினி மற்றும் அமிதாப்பச்சன் நடித்து ஹிந்தியில் வெளியானது. ஹிந்தியில் இந்த படத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இதே படத்தை திரும்பவும் மலையாளத்தில் திரைப்படமாக்கினார்.
இந்த முறை மலையாளத்தில் அதில் கதாநாயகனாக நடித்தது கமல்ஹாசன். கமல்ஹாசன் நடித்து மலையாளத்திலும் பெரும் வெற்றி கொடுத்ததை அடுத்து தெலுங்கில் இதே கதையை மீண்டும் படமாக்கினார் தெலுங்கில் அந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்தார். பிறகு கன்னட மொழியிலும் கூட இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

அந்த அளவிற்கு எஸ்.ஏ சந்திரசேகரின் கதை பிரபலமானதாக இருந்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த எல்லா படத்திலும் கதாநாயகனின் பெயர் விஜய் என்றே இருந்துள்ளது.






