Connect with us

சாப்பிட்ட தட்டை பையன்தான் எடுக்கணும்!.. சிவாஜியிடம் இருந்து சிரஞ்சீவி கற்றுக்கொண்ட விஷயம்!..

sivaji chiranjeevi

Cinema History

சாப்பிட்ட தட்டை பையன்தான் எடுக்கணும்!.. சிவாஜியிடம் இருந்து சிரஞ்சீவி கற்றுக்கொண்ட விஷயம்!..

cinepettai.com cinepettai.com

Tamil Actor Sivaji Ganesan : இந்தியாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் அவருக்கு நிகரான நடிகர் ஒருவர் இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு அனைத்து நடிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனிடம் பேசுவதையே பெரிய வரமாக பல நடிகர்கள் நினைத்து வந்த காலகட்டமாக அது இருந்தது.

அந்த சமயத்தில் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் கூட சிவாஜி கணேசனை ஒருமுறையாவது சந்தித்து பேசிவிட்டு செல்வதுண்டு. அப்படியாக தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகர் சிரஞ்சீவியும் ஒருமுறை சிவாஜி கணேசனை வந்து சந்தித்தார்.

அப்போது சிவாஜி கணேசனும், சிரஞ்சீவியும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கான இனிப்புகள் தட்டில் வைக்கப்பட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டன. அந்த இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் சினிமாவில் அவரது அனுபவங்களை குறித்து சிரஞ்சீவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

பிறகு அந்த தட்டில் இருந்த இனிப்புகள் தீர்ந்து விட்டன. அந்த தட்டை எடுப்பதற்கு வேலை ஆளைக் கூப்பிடாமல் தனது மகனை அழைத்தார் சிவாஜி கணேசன். அப்போது ஏற்கனவே பிரபு தமிழ் திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக இருந்தார்.

அவருக்கென்று வரவேற்பும் புகழும் கிடைத்திருந்தது. இருந்தாலும் சிவாஜி கூப்பிட்ட உடனே வந்து அந்த தட்டை எடுத்துச் சென்றார் பிரபு. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி என்ன உங்கள் மகனை வைத்து தட்டை எடுக்க சொல்கிறீர்களே என்று கேட்ட பொழுது எவ்வளவு பெரிய மனிதனானாலும் நம்மை விட மூத்தவர்களுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் சிவாஜி கணேசன்.

அதற்குப் பிறகு சிரஞ்சீவியும் அதே முறையை பின்பற்றியுள்ளார். தமிழின் பிரபல திரைக்கதை எழுத்தாளரான பூபதி ராஜா ஒருமுறை சிரஞ்சீவியை சந்திக்க சென்ற பொழுது இதே மாதிரியே அங்கே வைத்து இருந்த சட்டை எடுப்பதற்கு அவர் ராம்சரணை அழைத்துள்ளார்.

அப்பொழுது ராம் சரணும் மகதீரா போன்ற திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக இருந்தார். ஆனாலும் அவர் வந்து தட்டை எடுத்துச் சென்றார் அப்போது இதை நான் சிவாஜி கணேசனிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என்று சிரஞ்சீவி விளக்கியுள்ளார்.

POPULAR POSTS

ajith
karthik subbaraj cv kumar
ajith
kamalhaasan lingusamy
vengatesh bhat
inga naan thaan kingu
To Top