மேடையில் ஹீரோவின் அப்பா காலில் விழுந்ததுக்கு இதுதான் காரணம்!.. நடிகர் மாரிமுத்துவையே சிலிர்க்க வைத்த நடிகர்!.

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக நடிகர் இயக்குனர் என பன்முக தன்மையோடு இருந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆனால் மிக தாமதமாகதான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். முக்கியமாக சன் டிவியில் ஒளிப்பரபாகிய எதிர்நீச்சல் நிகழ்ச்சி மூலமாகதான் ஓரளவு இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார்.

இவர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். அந்த படப்பிடிப்பு குறித்த அனுபவத்தை முன்பொரு பேட்டியில் தெரிவித்துள்ளார் மாரிமுத்து.

Social Media Bar

அந்த படத்தில் பரியனின் தந்தையாக தங்கராஜ் என்பவர் நடித்திருந்தார். இவர் கூத்துக்கட்டி ஆட கூடியவர். கூத்து கட்டும் இடங்களில் பெண் வேடமிட்டு ஆடக்கூடியவர். இதற்காக உண்மையாகவே கூத்து கட்டி ஆடிய நபரை தேர்ந்தெடுத்து படத்தில் நடிக்க வைத்தார் மாரி செல்வராஜ்.

ஆனால் அவரை பார்த்ததும் இவர் ஹீரோ அப்பா கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்க மாட்டார் என நினைத்தார் மாரிமுத்து. இதை இயக்குனரிடமும் கூறி இருக்கிறார். ஆனால் படம் முடிந்த பிறகு அதில் தங்கராஜின் நடிப்பை பார்த்த மாரிமுத்து ஆடி போய்விட்டார்.

அதன் பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தப்போது அங்கு தங்கராஜும் வந்திருந்தார். அவரை கண்ட மாரிமுத்து அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதாக கூறியுள்ளார்.