தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலமாக வெள்ளி திரைக்குள் நுழைந்தவர்கள் ஏராளம். தற்போது பிரபல நடிகைகளாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்றவர்கள் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர்களே.. ! அதுபோல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் லாஸ்ட்லியா.

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்ட்லியா அங்குள்ள தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். 2019 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க லாஸ்ட்லியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு நடிகர் கவின் உடனான அவரது பழக்கம், காதல் போன்றவற்றால் அந்த சமயமே தமிழ் ரசிகர்கள் பலரின் கவனத்தையும் பெற்றார் லாஸ்லியா.

அதன் பின்னர் லாஸ்ட்லியாவுக்கு பட வாய்ப்புகளும் தொடர்ந்து வர தொடங்கியது. முதல் படமே ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்ஷிப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது லாஸ்ட்லியாவுக்கு. அடுத்து மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட கூகுள் குட்டப்பா படத்தில் லாஸ்ட்லியா நடித்திருந்தார்.

ஆனால் அதன் பின்னர் அவரது படங்கள் பெரிதாக எதுவும் வெளியாகவில்லை. தற்போது அறிமுக நடிகரான ஹரி பாஸ்கர் நடிக்கும் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் லாஸ்ட்லியா நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல போட்டோ சூட்டுகளை எடுத்து பதிவேற்றி வருகிறார் லாஸ்ட்லியா. ஆரம்பங்களில் க்யூட்டான போட்டோக்களை பகிர்ந்து வந்த லாஸ்ட்லியா சமீபமாக ரசிகர்களை கவரும் விதமான மாடல் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார். இதனால் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.






