நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் லோகா. வெகு வருடங்களாகவே கல்யாணி ப்ரியதர்ஷன் ஒரு பிரபலமான நடிகையாவதற்கு முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் அவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆனால் அந்த படங்கள் எல்லாம் அவருக்கு அந்த அளவிற்கு பெரிதான வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் லோகா.
திரையரங்கில் ஹிட்:
லோகா ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் துல்கர் சல்மானால் தயாரிக்கப்பட்டு இந்த படம் வெளியானது. எதிர்பார்த்ததை விடவும் லோகா திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது.
மிழ் சினிமாவில் இதற்கு முன்பு கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோ, மாநாடு மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்களை விடவும் லோகா திரைப்படம் அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் எப்பொழுது இந்த படம் ஓ.டி.டியில் வரும் என்று எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வருகிற 20-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.