புது ஆக்டர்ஸ் காம்போவில் இறங்கும் தனுஷ்!.. தனுஷ் 50 படத்தின் ஃபுல் அப்டேட் வெளியானது…

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். இயக்குனரின் மகன் என்றாலும் ஆரம்பத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் திருடா திருடி,காதல் கொண்டேன் போன்ற திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன.

அதன் பிறகு தனுஷின் சினிமா வாழ்க்கை இயக்குனர் வெற்றி மாறனால் பெரும் மாற்றத்தை கண்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதனை தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டார் தனுஷ்.

ஹாலிவுட், பாலிவுட் என பல இடங்களிலும் தனது நடிப்பு திறனை காட்டியுள்ளார். தற்சமயம் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50 ஆவது படத்தை நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்க இருக்கிறார்.

Social Media Bar

தற்சமயம் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. படக்கதைப்படி மூன்று சகோதரர்களிடையே நடக்கும் விஷயங்களை வைத்து படம் செல்லும் என கூறப்படுகிறது. அதில் தனுஷும்  ஒருவராக இருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் சூரரை போற்று, வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை துஷாரா விஜயன் தனுஷிற்கு தங்கையாக நடிக்கிறார். சந்தீப் கிஷன் தனுஷ் சகோதரராக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வருகிற ஜூலையில் படப்பிடிப்பை துவங்கி மூன்று மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க உள்ளனர். ஜூலையில் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.