என்னை அடுத்த விஜயகாந்துன்னு சொன்னாங்க!… அதனாலேயே என் சினிமா வாழ்க்கையே போயிடுச்சு… புலம்பும் நடிகர் சரவணன்!..

1991 இல் வைதேகி வந்தாச்சு என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சரவணன். அதன்பிறகு தொடர்ந்து அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் கிடைத்தன.

கிட்டத்தட்ட 1994 வரையிலும் வரிசையாக திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. ஆனால் ஒரு சரவணன் ஒரு நகைச்சுவை நடிகராக மிகவும் பிரபலமாக இருந்ததால் அவரது நகைச்சுவைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் இருந்து வந்தது.

அவருடைய இரண்டாவது படமான பொண்டாட்டி ராஜியம் என்கிற திரைப்படம் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலம் அடைந்தது. ஆனால் அப்போது இருந்த பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் சரவணன் பார்ப்பதற்கு விஜயகாந்த் போலவே இருப்பதால் அவரை அடுத்த விஜயகாந்த் என்று கூறினர்.

Social Media Bar

அப்போது விஜயகாந்த் பெரும் நடிகராக இருந்தார். எனவே அவருக்கு இணையாக சரவணனை கூறியது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை அடுத்து சரவணனின் மார்க்கெட் குறைய தொடங்கின.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது என்னை விஜயகாந்த் மாதிரி இருக்கேன் என்று சொல்லியே சினிமாவில் இல்லாமல் செய்து விட்டார்கள். ஆனால் நடிக்கும் விதத்தில் பார்க்கும் பொழுது நான் முற்றிலுமாக விஜயகாந்தில் இருந்து மாறுபட்டவன் என்று கூறியுள்ளார் சரவணன்.