Connect with us

20 வருசத்துக்கு முன்னாடி வந்த கில்லியை கொண்டாடுறீங்க!.. ஆனா அதை கொண்டாடுனீங்களா!.. மக்களை நேரடி கேள்வி கேட்ட தாமு!.

vijay dhamu

News

20 வருசத்துக்கு முன்னாடி வந்த கில்லியை கொண்டாடுறீங்க!.. ஆனா அதை கொண்டாடுனீங்களா!.. மக்களை நேரடி கேள்வி கேட்ட தாமு!.

Social Media Bar

2004 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் கில்லி. கில்லி வெற்றியை தொடர்ந்து அதற்கு பிறகு வந்த 90ஸ் கிட்ஸ் பலரும் தொலைக்காட்சிகளிலேயே கில்லி திரைப்படத்தை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் கில்லி திரைப்படத்தை ஒரு முறையாவது திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று இருந்த 90ஸ் களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் சமீபத்தில் கில்லி திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தது.

யாருமே எதிர்பார்க்காத வகையில் அதன் கலெக்‌ஷன் இருந்தது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தாமு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில விஷயங்களை பேசியிருந்தார்.

ghilli
ghilli

கில்லி திரைப்படத்தில் நான் ஓட்டேரி நரி கதாபாத்திரத்தில் நடித்தேன். இருபது வருடங்கள் கழித்தும் அந்த கதாபாத்திரமும் கில்லி திரைப்படமும் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒரு நபர் 20 வருடங்களுக்கு முன்பு பல மரங்களை நட்டார்.

அவை யாவும் தற்சமயம் வளர்ந்து நிழல் தந்து வருகிறது. ஆனால் அந்த நபரை யாருமே கொண்டாடவில்லை என முன்னாள் குடியரசு தலைவர் ஐயா அப்துல்கலாமை குறிப்பிடுகிறார் நடிகர் தாமு. விவேக்கை போலவே நடிகர் தாமுவும் அப்துல்கலாமின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பின்பற்றி வந்தவராவார்.

To Top