நடிகர் கார்த்தி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விருமன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன.
அதனை தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த கார்த்தியை அடுத்து வேற்று மொழி சினிமாக்களிலும் அறிமுகமாவதற்கு திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

அந்த வகையில் ஹிந்தி கன்னடம் மற்றும் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் இயக்குனர்களின் கதை கேட்டு இருக்கிறாராம் கார்த்திக் கைதி 2 திரைப்படத்திற்கு பிறகு அதே போலவே ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.
எனவே பெரும்பாலும் ஹிந்தி சினிமாவிற்குதான் இவர் செல்வார். ஏனெனில் ஹிந்தி சினிமாவில்தான் அவ்வளவு பெரிய மார்க்கெட் இருக்கிறது என்று பேச்சுக்கள் இருக்கின்றன.