Connect with us

அடுத்த சிம்புவாக மாறிய கவின்!.. இப்படியெல்லாம் பண்ணுனா சினிமால இருக்க முடியாதுப்பா!..

actor kavin

News

அடுத்த சிம்புவாக மாறிய கவின்!.. இப்படியெல்லாம் பண்ணுனா சினிமால இருக்க முடியாதுப்பா!..

Social Media Bar

Kavin : நடிகர்களை பொருத்தவரை வாய்ப்புகள் அதிகம் வந்தாலும் கூட சிம்பிளாக இருக்கும் சில நடிகர்கள் உண்டு. விஜய் ஆண்டனி மாதிரியான சில நடிகர்கள் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மிகவும் சாதாரணமாக மற்றவர்களிடம் பழகக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ஆனால் சில நடிகர்கள் நல்ல வெற்றி கொடுத்து விட்டால் அதன் பிறகு அவர்களது நடவடிக்கைகளிலேயே மாற்றம் ஏற்பட்டு விடும். அப்படியாகதான் தற்சமயம் திரைத்துறையில் கெட்ட பெயரை வாங்கி வருகிறார் நடிகர் கவின்.

டாடா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவினுக்கு நிறைய வாய்ப்புகள் வரத் துவங்கின. இதனை பார்த்த கவின் தனது சம்பளத்தை நான்கு கோடியாக உயர்த்தினார் என்று ஏற்கனவே பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த சம்பளம் கட்டுபடியாகாததால் ஏற்கனவே சுந்தர் சி கலகலப்பு 3 திரைப்படத்தில் கவினை நடிக்க வைக்க நினைத்து இறுதியில் சம்பள பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாத காரணத்தினால் கவினை அந்த திரைப்படத்தில் நடிக்க வைக்கவில்லை.

கவினால் வந்த பிரச்சனை:

தற்சமயம் வேறு ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் கவின். ஆனால் தினசரி படபிடிப்பிற்கு கவின் தாமதமாகத்தான் வருகிறாராம். மேலும் அவ்வளவு ஈடுபாடாக நடிக்கவும் மாட்டேங்கிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இதே மாதிரிதான் முன்பு நடிகர் சிம்புவும் செய்து வந்தார்.

பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின. அதன் பிறகு திருந்தி தற்சமயம் சிம்பு அனைத்து திரைப்படங்களிலும் சரியாக நடித்து வருகிறார். ஆனால் கவின் ஆரம்ப கட்டத்திலேயே இப்படி செய்வது அவருடைய வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் கவினுக்கு திரையரங்க வெற்றி என்று டாடா என்கிற ஒரு திரைப்படம் தான் அமைந்துள்ளது. அதற்கு முன்பு அவர் நடித்த லிப்ட் திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை. எனவே அதற்குள்ளாகவே கவின் இப்படி செய்வது நல்லதே கிடையாது என்று பேசப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top