Connect with us

அந்த கேரக்டர்லாம் என்னால நடிக்க முடியாது!.. லோகேஷ்க்கு நோ சொன்ன நரேன்… என்ன நடந்தது?

lokesh kanagaraj naren

News

அந்த கேரக்டர்லாம் என்னால நடிக்க முடியாது!.. லோகேஷ்க்கு நோ சொன்ன நரேன்… என்ன நடந்தது?

அந்த கேரக்டர்லாம் என்னால நடிக்க முடியாது!.. லோகேஷ்க்கு நோ சொன்ன நரேன்… என்ன நடந்தது?

Social Media Bar

சினிமாவில் வெகு சீக்கிரமே வளர்ந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் யோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவு வருகிறது. இதனால் லோகேஷ் கனகராஜ் அடுத்து ஹீரோவாகவும் நடிக்கப் போகிறார் என்று ஒரு பேச்சும் இருந்து வருகிறது.

தற்சமயம் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிய லோகேஷ் அடுத்து ரஜினியை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார். ஆனால் இந்த இடைப்பட்ட இடைவெளியில் என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை. லோகேஷின் எம் சி யு திரைப்படங்கள் கைதி திரைப்படத்திலிருந்துதான் துவங்கியது.

கைதி திரைப்படத்தை எடுக்க ஆரம்பிக்கும் பொழுது போலீஸ் கதாபாத்திரத்திற்கு யாரையுமே தேர்வு செய்யவில்லை முதலில் கதாநாயகனாக கார்த்தியை தேர்வு செய்துவிட்டனர். எனவே கதையை கார்த்தியிடம் கூறினார் லோகேஷ்.

கதையைக் கேட்ட கார்த்திக்கு படம் மிகவும் பிடித்து விட்டது அதில் போலீஸ் கதாபத்திரம் முக்கியமானதாக இருந்தால் அதை யார் நடிக்கிறார்கள் என்று கேட்டார் கார்த்தி. அப்பொழுது நடிகர் நரேனிடம் கேட்கலாம் என்று இருக்கிறோம். என படக்குழுவினர் கூறி உள்ளனர்.

போலீஸ் கதாபாத்திரம் என்றால் அதில் அவர் நடிக்கவே மாட்டார். எனவே நானே நரேனிடம் பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறேன். நீங்கள் கேட்க வேண்டாம் என கூறிவிட்டு நரேனுக்கு போன் செய்தார் கார்த்தி.

ஒரு நல்ல கதை இருக்கிறது நான்தான் கதாநாயகனாக நடிக்கிறேன் இன்னொரு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது. ஆனால் ஒரு பிரச்சனை என கார்த்தி கூறியுள்ளார் .அதை கேட்டதுமே நரேன் என்ன போலீஸ் கதாபாத்திரமா என்று சரியாக கேட்டுள்ளார்.

ஆமாம் என கார்த்தி கூறியுள்ளார். பிடிக்காது என்றாலும் கூட கார்த்தியுடனான நட்புக்காகதான் நரேன் கைதி திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் விக்ரம் திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரம் தொடர்ந்து தற்சமயம் லோகேஷ் எல் சி யு வில் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக நரேனின் கதாபாத்திரம் மாறி உள்ளது.

To Top