எண்ணன்னே உங்களை வச்சி நான் படம் பண்ண கூடாதா? மறைமுகமாக நடிகர் சூரிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!..

Actor Suri : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நடிகராக இருந்தவர் சூரி என கூறும் நிலை இன்னும் கொஞ்ச நாட்களில் ஏற்பட்டு விடும் என்று கூறலாம். அந்த அளவிற்கு தொடர்ந்து உலக சினிமா ரசிகர்களால் போற்றப்படும் அளவிற்கு இருக்கும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார் சூரி.

இவர் நடித்த விடுதலை திரைப்படமே உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக இருக்கின்றன. இந்த நிலையில் சூரியின் நடிப்பில் அடுத்து வரும் திரைப்படம் இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் ஆகும்.

Social Media Bar

விடுதலை திரைப்படம் போலவே முக்கியமான கதைகளத்தை கொண்ட ஒரு திரைப்படம் என்று கூறப்படுகிறது. ஒரு காமெடி நடிகர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை இவ்வளவு தைரியமாக தேர்ந்தெடுத்து நடிப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.

சூரிக்கு வந்த இன்ப அதிர்ச்சி:

இது இல்லாமல் இயக்குனர் ராம் இயக்கத்திலும் ஏழு கடல் ஏழுமலை என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூரி. இந்த மூன்று திரைப்படங்களுமே கவனத்தை பெரும் திரைப்படங்களாக அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் சூரி நடிக்கும் கொட்டு காளி திரைப்படத்தை தயாரித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று தனது பேட்டயில் கூறுகிறார் சூரி.

கொட்டுக்காளி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான பொழுது அதை சிவகார்த்திகேயன்தான் தயாரிக்கிறார் என்பது எனக்கு தெரியாது. ஒரு முறை சிவகார்த்திகேயன் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது படத்தின் தயாரிப்பாளர் வந்திருக்கிறார் அவரை சந்தித்து விடுங்கள் என்று இயக்குனர் என்னிடம் கூறினார்.

சரி என்று நான் சென்றபோது அங்கு சிவகார்த்திகேயன்தான் இருந்தார் நானும் சிவகார்த்திகேயனிடம் வழக்கமாக பேசிவிட்டு எங்கு கொட்டுக் காளி திரைப்படத்தின் தயாரிப்பாளரை காணவில்லையே என தேடிய பொழுது சிவகார்த்திகேயன்தான் அப்போது கூறினார் ”நான்தான் உங்கள் திரைப்படத்தை தயாரிக்கிறேன்” என்று, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று அந்த தருணத்தை பகிர்ந்து இருக்கிறார் சூரி.