News
நல்ல நாள் பார்த்து வரோம் – விருமன் ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா
தமிழில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் முத்தையா. தமிழில் பிரபல ஹீரோக்கள் பலர் இவர் இயக்கிய படங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் முத்தையா குறைந்த செலவில் படமெடுத்து அதை மிகப்பெரும் வெற்றி படமாக கொடுக்க கூடியவர்.

இவர் இயக்கி வெளியான குட்டி புலி, கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.
ஏற்கனவே நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் கொம்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கடுத்து முத்தையா தற்சமயம் இயக்கி வெளியாக இருக்கும் விருமன் திரைப்படத்திலும் இவரே கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழின் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் நடிகர் சூரி, ராஜ்கிரண் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது.

இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்ண்டெயின்மெண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் படம் தற்சமயம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா தற்சமயம் விருமன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். விருமன் திரைப்படமானது வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என கூறியுள்ளார் சூர்யா.
