Connect with us

நான் வேற எங்கப்பா வேற!.. பேருக்கு பின்னால் இருந்த விஜய் சேதுபதி பெயரை நீக்கிய மகன்!..

surya vijay sethupathi

News

நான் வேற எங்கப்பா வேற!.. பேருக்கு பின்னால் இருந்த விஜய் சேதுபதி பெயரை நீக்கிய மகன்!..

Social Media Bar

Actor Surya Vijay sethupathi : தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர்கள் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. ஏனெனில் ஒரே மாதிரியான கதை அமைப்பு கொண்ட படங்களில் மட்டுமே நடிக்காமல் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

மேலும் தமிழ் சினிமாவிலேயே ஒரே நேரத்தில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் மாறி மாறி நடிப்பவராக விஜய் சேதுபதி இருக்கிறார். தற்சமயம் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருந்த ஜவான் திரைப்படத்தில் கூட விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்ததை பார்க்க முடிந்தது.

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஜய் சேதுபதி தற்சமயம் அதில் பெரும் உயரத்தை தொட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மகன் சூர்யா விஜய் சேதுபதியும் தமிழ் சினிமாவில் கால் பதிக்க ஆசைப்பட்டு உள்ளார். எனவே அவர் பீனிக்ஸ் என்கிற ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பாக்சிங் தொடர்பான திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் பூஜையின்போது நடந்த பேட்டியில் சூர்யா பேசும் பொழுது நீங்கள் படத்தில் நடிக்க போவது குறித்து உங்கள் தந்தை என்ன கூறினார் என்று அவரிடம் கேட்டார்கள்.

அதற்கு பதில் அளித்த சூர்யா நான் வேறு என் தந்தை வேறு இரண்டையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். அதனால்தான் படத்தில் கூட எனது பெயரை வெறும் சூர்யா என்று போட்டிருக்கிறேன் சூர்யா விஜய் சேதுபதி என்று நான் போடவில்லை என்று கூறி இருக்கிறார் சூர்யா. எனவே இதன் மூலம் தன்னுடைய தந்தையின் அடையாளம் இல்லாமல் தனிப்பட்ட அடையாளத்துடன் வரவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்று தெரிகிறது.

To Top