Connect with us

எனக்கு அதிகமா உறுப்பினர்களை சேர்க்குறவங்களுக்கு சர்ப்ரைஸ்!.. விஜய்யின் புது அறிவிப்பு… என்னையா எம்.எல்.எம் மாதிரி இறங்கிட்டீங்க!..

vijay

News

எனக்கு அதிகமா உறுப்பினர்களை சேர்க்குறவங்களுக்கு சர்ப்ரைஸ்!.. விஜய்யின் புது அறிவிப்பு… என்னையா எம்.எல்.எம் மாதிரி இறங்கிட்டீங்க!..

Social Media Bar

Vijay : தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை விஜய் துவங்கியது முதலே அதற்கான வரவேற்பு என்பதும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. விஜய் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் கூட இருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தாலும் இவ்வளவு காலம் அரசியலில் போராடிவரும் சீமான் விஜயகாந்த் போன்றவர்களே ஆட்சியைப் பிடிக்க முடியாமல் இருக்கும்பொழுது இப்பொழுது வரும் விஜய்யால் எப்படி முடியும் என்றும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் 2026 இல் வரும் சட்டமன்ற தேர்தலில்தான் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். எனவே அதற்கான வேலைகளை தற்சமயம் துவங்கியிருக்கிறார். ஏற்கனவே கட்சியின் பெயர் வைக்கப்பட்ட பொழுதே நிறைய சர்ச்சைகள் வந்தன.

அவற்றையெல்லாம் தாண்டி வந்த தமிழக வெற்றி கழகம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் பனையூரில் உள்ள அவர்களது தலைமை நிலைய செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

புதிய திட்டங்கள்:

அதன்படி இன்னும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தளபதி விஜய் நிர்வாகிகளுக்கு கூறியிருக்கிறாராம். எனவே இந்த கட்சியில் நபர்களை சேர்ப்பதற்காகவே சிறப்பாக ஒரு செயலியை கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் பேசியிருக்கின்றனர்.

அடுத்த வாரத்திற்குள் அந்த செயலி செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதன் மூலமாக எளிமையாக யார் வேண்டுமானாலும் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ள முடியும். அதற்கான ஐடி கார்டுகளும் அவர்களுக்கு அந்த செயலியிலேயே வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

vijay
vijay

இந்த நிலையில் இந்த செயலி குறித்து தளபதி ஒரு சிறப்பு அம்சத்தையும் அறிவித்திருக்கிறார் அதாவது முதலில் இந்த செயலியை மக்கள் பயன்பாட்டுக்காக இல்லாமல் நிர்வாகிகளின் செயல்பாட்டுக்குதான் கொண்டு வரப் போகிறார்கள். அதன் மூலமாக நிர்வாகிகள் பொதுமக்களை இந்த தமிழக முன்னேற்றக் கழகத்தில் சேர்க்க முடியும் அப்படி யார் தமிழக முன்னேற்றக் கழகத்தில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கிறார்களோ அவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று கூறியிருக்கிறாராம் விஜய். இதனை அடுத்து தொடர்ந்து பலரையும் கட்சியில் சேர்ப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top