Connect with us

மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் பண்ணவே லஞ்சம் வாங்குனாங்க!.. பிரதமரிடமே புகாரளித்த விஷால்

vishal modi

News

மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் பண்ணவே லஞ்சம் வாங்குனாங்க!.. பிரதமரிடமே புகாரளித்த விஷால்

Social Media Bar

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால் செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார் விஷால். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிறைய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன அதில் சண்டக்கோழி திமிரு போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை ஆகும்.

தொடர்ந்து திரைப்படங்களாக நடித்து வந்த விஷாலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. அதன் பிறகு அவருக்கு நடிப்பில் ஒரு இடைவெளி ஏற்பட்டது திரும்ப கம்பேக்காக லத்தி திரைப்படம் மூலமாக விஷால் வந்தார்.

ஆனால் லத்தி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை தற்சமயம் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. மார்க் ஆண்டனி திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்த படத்தை பாலிவுட்டிலும் ரிலீஸ் செய்தார் விஷால் தற்சமயம் பாலிவுட்டில் நடந்த ஊழல் குறித்து முக்கியமான தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷால்.

அதன்படி பாலிவுட்டில் சென்சார் சர்டிபிகேட் வாங்குவதற்கும் படத்தை வெளியிடுவதற்கும் கிட்டத்தட்ட 6.5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் விஷால். சான்றிதலுக்காக மூன்று லட்சமும் படத்தை வெளியிடுவதற்காக 3.5 லட்சமும் லஞ்சமாக வாங்கியுள்ளனர். இந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட விஷால் இது குறித்து ஆய்வு செய்யும் படி பிரதமர் நரேந்திர மோடியிடமும், மகாராஷ்டிரா முதலமைச்சரிடமும் கேட்டுள்ளார்.

To Top