Connect with us

எனக்கு செஞ்சதுக்குதான் நல்லா அனுபவிச்சார் வடிவேலு!.. நடிகை ஆர்த்திக்கு நடந்த துரோகம்!.

aarthi vadivelu

News

எனக்கு செஞ்சதுக்குதான் நல்லா அனுபவிச்சார் வடிவேலு!.. நடிகை ஆர்த்திக்கு நடந்த துரோகம்!.

Social Media Bar

Actor Vadivelu: வெகுகாலமாக தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக நகைச்சுவை காட்சிகளில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் வடிவேலு. கவுண்டமணி செந்தில் இருவரும் சினிமாவில் பிரபலமாக இருந்த சமகாலத்திலேயே வடிவேலு திரைத்துறைக்கு வந்து தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார் என்றாலும் கூட சினிமாவிற்கு வந்த பிறகு மற்ற காமெடி நடிகர்களுக்கு நிறைய பிரச்சனைகளை கொடுத்துள்ளார் வடிவேலு எனக் கூறப்படுகிறது. இதுவரை அவரைக் குறித்து பேட்டி கொடுத்த பல பிரபலங்கள் கூறும்பொழுது வடிவேலு குறித்து மோசமான விஷயங்களைதான் பகிர்ந்து இருக்கின்றனர்.

அந்த வகையில் காமெடி நடிகையான ஆர்த்தியும் கூட அவருக்கு நடந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். காமெடி நடிகர் கணேஷ்கரைதான் ஆர்த்தி திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்குமே வடிவேலுவால் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.

vadivelu
vadivelu

வடிவேலுவை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் அவருடன் சேர்ந்து நடிக்கும் காமெடி நடிகர்கள் யார் என்பதை அவர் தான் முடிவு செய்து கொள்வார். ஆர்த்தியுடன் வடிவேலு நடித்த கிரி மாதிரியான திரைப்படங்களில் ஆர்த்தி சிறப்பாக காமெடியை வெளிப்படுத்திய காட்சிகள் நிறைய இருந்தன.

ஆனால் அவற்றைப் பார்த்தால் மக்கள் வடிவேலுவை கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்காக வடிவேலு அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டார் என்று ஆர்த்தி தனது பேட்டியில் கூறுகிறார். மேலும் 24 ஆம் புலிகேசி படத்திற்கான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த பொழுது அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ஆர்த்திக்கு கிடைத்தது.

அதன் பிறகு சில நாட்களில் ஆர்த்திக்கு போன் செய்து வடிவேலு உங்களையும் கோவை சரளாவையும் படத்திலிருந்து நீக்க சொல்லிவிட்டார் எனவே வேறு படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கின்றனர். அதற்குப் பிறகு 24 ஆம் புலிகேசி திரைப்படம் எடுக்கப்படவே இல்லை மேலும் 10 வருடங்கள் வடிவேலுக்கு திரைத்துறையில் வாய்ப்பு இல்லாமல் போனது என்று கூறிய ஆர்த்தி அவர் மற்றவர்களுக்கு என்ன செய்கிறாரோ அதே தான் அவருக்கும் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

To Top