சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக பலரும் காத்திருந்தாலும் கூட சினிமா பின்புலம் இருக்கும் சிலருக்கு அது எளிதாகவே கிடைத்து விடுகிறது. அப்படியாக தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆனவர்தான் நடிகை பவானி ஸ்ரீ. நடிகை பவானி ஸ்ரீ இசையை பின்புலமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்.
மேலும் இவர் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷின் உடன்பிறந்த தங்கை ஆவார். இவருக்கு மாடலிங் துறை மீது அதிகமாக ஆர்வம் இருந்த காரணத்தினால் அதில் தனது ஈடுபாட்டை காட்டி வந்து கொண்டிருந்தார்.

தே சமயம் அவருக்கு சினிமா மீதும் ஆர்வம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன முதலில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இப்படியாக பாவ கதைகள், கா பெ ரணசிங்கம் போன்றவற்றில் நடித்தார் பவானி ஸ்ரீ. கா பெ ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக இவர் நடித்த கதாபாத்திரம் ஓரளவு பேசப்படும் கதாபாத்திரமாக அமைந்தது.
முகத்தில் செய்த மாற்றம்:
அதனை தொடர்ந்து அவருக்கு விடுதலை திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. கருப்பு நிறத்தில் இருந்தாலும் கூட மலைவாழ் கிராம மக்களை போலவே அவர் இருந்ததாலும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருந்ததாலும் விடுதலை திரைப்படத்தில் அவருக்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தன.

தொடர்ந்து விடுதலை பாகம் 2 திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாகவே நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு வரும்பொழுது கருப்பு நிறத்தில் வந்தாலும் பிறகு அங்கே இருக்கும் நிறவேற்றுமை காரணமாக அவர்கள் தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்வது உண்டு.
இந்த வகையில் பவானி ஸ்ரீயும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை வெள்ளையாக்கி இருக்கிறார். தற்சமயம் வெள்ளையாக இருக்கும் அவரை விட கருப்பாக இருந்த பொழுதுதான் அழகாக இருந்தார் என்று கூறுகின்றனர் ரசிகர்கள். தேவையில்லாமல் எதற்கு இப்பொழுது பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார் என்பதே அவர்களது குறையாக உள்ளது.