எதுக்காக இப்படி பண்ணுனாங்கனு தெரியல!.. தமிழ் சினிமா குறித்து கிரண் பகிர்ந்த தகவல்..

தமிழ் சினிமா நடிகைகளில் சிலர் முதல் படத்துலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுவார்கள். அப்படியாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கிரண் ராத்தோர்.

தமிழில் சரண் இயக்கிய ஜெமினி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை கிரண். தமிழ் சினிமாவிற்கு வந்த உடனேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற துவங்கினார் கிரண்.

ஆனால் சில படங்களுக்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் வருவது நின்றுபோனது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவை விட்டு விலகினார் கிரண். தற்சமயம் கோவாவில் ஒரு வீடு கட்டி அங்கு தங்கியிருக்கிறார் கிரண்.

ஒரு பேட்டியில் அவரிடம் ஏன் தமிழ் சினிமாவை விட்டு சென்றீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு கிரண் பதிலளிக்கும்போது நான் தமிழ் சினிமாவை விட்டு செல்லவில்லை. தமிழில் வரிசையாக 5 ஹிட் படங்களில் நடித்தேன். ஆனால் அந்த 5 திரைப்படங்களுக்கு பிறகு எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஏன் இப்படி செய்தார்கள் என எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழக மக்கள் என்னை விரும்புகின்றனர். எனவே நான் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார் நடிகை கிரண்.