தனுஷ்க்கும் எனக்கும் இரண்டாம் திருமணம்.. வாயை திறந்த மீனா.. இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் அதிகமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மீனா. மீனாவுக்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் அப்பொழுதே இருந்து வந்தது உண்மைதான்.

அதேபோல அப்போது தமிழில் பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் மீனா. திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவின் மீது அவருக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனா குடும்ப வாழ்க்கையில் மிக அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

அதனால் பெரிதாக சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை விட்டிருந்தார் மீனா. ஆனாலும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைக்கும் பொழுது மட்டும் சினிமாவில் நடித்துக் கொண்டு வந்தார். இந்த நிலையில் அவரது கணவர் இறப்புக்கு பிறகு மீனா முற்றிலுமாக உடைந்து போனார்.

meena

Social Media Bar

பதில் கொடுத்த மீனா:

அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. வாழ்க்கையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு வழியாக கொஞ்சம் முன்னேறி வந்திருக்கும் மீனா இப்பொழுது மீண்டும் சினிமாவில் கொஞ்சமாக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மீனாவின் மறு திருமணம் குறித்த பேச்சுக்கள் அதிகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கி இருக்கின்றன. நிச்சயமாக தனுஷ் தற்சமயம் தனது மனைவியை விவாகரத்து செய்திருக்கும் நிலையில் அவரும் மீனாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு பதில் அளித்த மீனா தனுஷும் நானும் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வலம் வருவதை பார்க்கிறேன். அவர் சிங்கிளாக இருக்கிறார் என்பதற்காக மட்டும் அவருக்கும் எனக்கும் திருமணம் ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள்.

உண்மையில் எனக்கு மறு திருமணத்தில் எல்லாம் இப்பொழுது ஆசையே கிடையாது. ஏதாவது ஒரு சர்ச்சையான செய்தி என்னை பற்றி வருகிறது என்றால் அட்லீஸ்ட் என்னிடம் கேட்டுவிட்டு அதை போடலாம் அதை கூட இந்த பத்திரிக்கையாளர்கள் செய்ய மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் மீனா.