Connect with us

அழுது வாய்ப்பை வாங்கிய நடிகை மீரா ஜாஸ்மின்… ஆனா அந்த படம்தான் பெரும் ஹிட்டு!.

meera jasmine

News

அழுது வாய்ப்பை வாங்கிய நடிகை மீரா ஜாஸ்மின்… ஆனா அந்த படம்தான் பெரும் ஹிட்டு!.

Social Media Bar

சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகள் வாய்ப்புகளை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தால் மட்டுமே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட சில சமயங்களில் வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு போவதும் உண்டு.

அப்படி தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை மீரா ஜாஸ்மின். ஆனால் முதல் திரைப்படத்திற்கு பிறகு சின்ன சின்ன திரைப்படங்களில்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தன.

ஒரு பெரிய திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இயக்குனர் லிங்குசாமி சண்டைக்கோழி திரைப்படத்தின் கதையை எழுதி வந்தார். இயக்குனர் லிங்குசாமிதான் மீரா ஜாஸ்மினை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி இருந்தார். எனவே இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு இருந்தது.

இந்த நிலையில் ஒருநாள் லிங்குசாமியின் அலுவலகத்திற்கு வந்த மீரா ஜாஸ்மின் அடுத்த படத்தின் கதை குறித்து கேட்டார். அப்பொழுது லிங்குசாமியும் கதையை கூறினார். அதைக் கேட்ட பிறகு கண்ணீர் விட்டு அழ துவங்கி விட்டார் மீரா ஜாஸ்மின்.

எதற்காக அழுகிறாய் என்று அவரிடம் கேட்ட பொழுது இவ்வளவு நல்ல கதையாக இருக்கிறது எதற்கு என்னை நடிக்க வைக்கவில்லை என்று கேட்டிருக்கிறார் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு யோசித்த லிங்குசாமி அந்த திரைப்படத்தில் மீரா ஜாஸ்மினிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அந்த திரைப்படம் மீரா ஜாஸ்மின் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

To Top