Connect with us

வணக்கம் வைக்கலைன்னு நடிகையை படத்தை விட்டு தூக்க பார்த்தார்!.. கவுண்டமணி அவ்ளோ டெரரா!..

gaundamani vichitra

Cinema History

வணக்கம் வைக்கலைன்னு நடிகையை படத்தை விட்டு தூக்க பார்த்தார்!.. கவுண்டமணி அவ்ளோ டெரரா!..

Social Media Bar

தமிழில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி. ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் நகைச்சுவையில் வளர்ந்து வந்தவர்தான் கவுண்டமணி.

கவுண்டமணி இருந்த சமகாலத்தில் அவருக்கு போட்டியாக பெரும் காமெடி நடிகர்கள் வேறு யாரும் இல்லை என்பதும் அதற்கு காரணமாகும். அதே சமயம் கவுண்டமணி குறித்து நிறைய சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வலம் வருவதுண்டு. கவுண்டமணியுடன் பணி புரிந்த பலரும் அவரைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.

அப்படி கவுண்டமணியுடன் அதிகமாக நடித்த நடிகைகளில் நடிகை விசித்ரா முக்கியமானவர். நடிகை விசித்ரா தொடர்ந்து காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். முக்கியமாக முத்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பா.ர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது பெரிய குடும்பம் என்னும் திரைப்படத்தில் எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க இருந்தார்.

ஆனால் ஒரு நாள் அவர் என்னை அழைத்து நீங்கள் கவுண்டமணியுடன் ஏதாவது சண்டையிட்டீர்களா? என்று கேட்டார் இல்லை சார் நான் எதுவும் செய்யவில்லை என்று நான் கூறினேன். அப்போது கே.எஸ் ரவிக்குமார், சரி என்னுடன் வாருங்கள் என்று அழைத்துச் சென்று கவுண்டமணிக்கு வணக்கம் சொல்ல சொன்னார். நானும் சரி என்று வணக்கம் கூறினேன்.

அதன் பிறகு தான் விஷயம் தெரிந்துள்ளது கவுண்டமணிக்கு என்றோ ஒரு நாள் விசித்திரா வணக்கம் வைக்கவில்லை என்பதற்காக அந்த படத்தை விட்டு அவரை நீக்குவதற்கு இருந்துள்ளார் கவுண்டமணி. இந்த விஷயத்தை அவர் அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார் விசித்ரா.

Articles

parle g
madampatty rangaraj
To Top