News
தமிழ் சினிமாவில் வந்த ஹீரோயின் பஞ்சம்!.. வரிசையில் காத்திருக்கும் அருண் விஜய், எஸ்.ஜே சூர்யா!.. என்ன கொடுமை இது?..
Tamil Heroine: தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்கிற தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு பஞ்சம் என்கிற நிலை ஏற்பட்டதே கிடையாது.
ஏனெனில் எப்போதும் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களை காட்டிலும் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள்தான் அதிகமாக இருந்து வருவார்கள். மேலும் தமிழ்நாடு சினிமா மார்க்கெட் கொஞ்சம் பெரிது என்பதால் வேற்று மொழி நடிகைகளும் கூட தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு உடனே விருப்பம் தெரிவிப்பதுண்டு.

தெலுங்கு மலையாளத்தில் பிரபலமாக இருந்த நடிகை க்ரீத்தி ஷெட்டி கூட தற்சமயம் தமிழில்தான் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு கதாநாயகி கிடைக்கவில்லை என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
கதாநாயகி கிடைக்காமல் கஷ்டப்படும் எஸ்.ஜே சூர்யா:
எஸ்.ஜே சூர்யா அவரே இயக்கி நடிக்கும் கில்லர் என்கிற திரைப்படத்தின் திரைக்கதை வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் கதாநாயகிக்கும் வழங்கப்பட்டதுள்ளாம்.

எனவே இந்த கதைக்கு கொஞ்சம் சிறப்பாக நடிக்க தெரிந்த கதாநாயகிகள் தேவைப்படுகின்றனர். இதற்காக வெகு காலமாகவே கதாநாயகிகளை தேடி வருகிறாராம் எஸ்.ஜே சூர்யா. அதே போல அடுத்து அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கும் வெகு நாட்களாகவே கதாநாயகியை தேடி வருகிறார்களாம்.
தற்சமயம் கதாநாயகி கிடைக்காமல் இந்த இரண்டு திரைப்படங்களுமே படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருக்கின்றன.
