Connect with us

அந்த கமல் படம் ஓடாது!.. துள்ளி குதித்த அஜித் இயக்குனர்!.. கமல் சொன்ன பதில்தான் ஹைலைட்…

kamal ajith

Cinema History

அந்த கமல் படம் ஓடாது!.. துள்ளி குதித்த அஜித் இயக்குனர்!.. கமல் சொன்ன பதில்தான் ஹைலைட்…

Social Media Bar

Kamalhaasan: தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் ஆரம்பத்தில் சண்டை காட்சிகள் கொண்ட சாதரண கதையமைப்பை கொண்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பிறகு தொடர்ந்து புது விதமான கதையமைப்புகளை கொண்ட திரைப்படங்களை கமல்ஹாசன் தேர்ந்தெடுக்க துவங்கினார்.

அப்படி கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்வியாகதான் இருந்தது. அதிகப்பட்சம் கமல்ஹாசனின் புது முயற்சிகள் தோல்வியைதான் கொடுத்தன. அப்படி கமல்ஹாசன் நடித்த மற்றொரு திரைப்படம் அன்பே சிவம்.

அன்பே சிவம் திரைப்படம் இப்போது வரை கமல்ஹாசன் திரைப்படத்தில் வெகுவாக பேசப்படும் திரைப்படமாகும். ஆனால் அந்த படம் வெளியான சமயத்தில் அதற்கு அவ்வளவாக வரவேற்பே இல்லாமல் இருந்தது. அதே சமயம் விக்ரம் நடிப்பில் இயக்குனர் சரண் இயக்கத்தில் தூள் திரைப்படம் வெளியானது.

கமல் படத்திற்கு போட்டியாக வெளியிடுகிறோமே என மிகவும் கவலையில் இருந்தார் இயக்குனர் சரண். இந்த நிலையில் வெளியீட்டுக்கு முன்பு அந்த அன்பே சிவம் படத்தை பார்த்த இயக்குனர் சரண் துள்ளி குதிக்க துவங்கினார். ஏனெனில் கண்டிப்பாக அன்பே சிவம் திரைப்படம் ஓடாது என அவர் முடிவு செய்தார்.

இதனால் மன வருத்தம் அடைந்தார் இயக்குனர் சுந்தர் சி. அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய கமல் நாம் நல்ல படத்தை இயக்கியுள்ளோம். கவலைப்படாதீர்கள் என கூறியிருக்கிறார்.

To Top