Connect with us

திருப்புகழில் இருந்து ஏ.ஆர் ரகுமான் உருவாக்கிய பாடல்.. உண்மையை கூறிய பாடகர்.!

Tamil Cinema News

திருப்புகழில் இருந்து ஏ.ஆர் ரகுமான் உருவாக்கிய பாடல்.. உண்மையை கூறிய பாடகர்.!

Social Media Bar

தமிழில் தனது வித்தியாசமான இசையை வழங்கி இசை புயல் என்ற பட்டத்தை பெற்றவர் ஏ.ஆர் ரகுமான். இளையராஜாவின் இசையை கேட்டு வந்த தலைமுறையினருக்கு திடீரென்று ஒரு புது இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அறிமுகமானார்.

அப்போதிலிருந்து இப்போது வரை ஏ ஆர் ரகுமானின் இசைக்கு என்று ஒரு தனி மதிப்பு இருக்கதான் செய்கிறது. ஏ.ஆர் ரகுமான் எங்கிருந்தும் ஒரு நல்ல இசையை எடுக்க கூடியவர்.

பழைய பாடல்களில் இருந்தும் பழைய பாடல் வரிகளில் இருந்தும் நிறைய இசையை ஏ ஆர் ரகுமான் கொண்டு வந்திருக்கிறார். அப்படியாக அவர் செய்த ஒரு விஷயம் குறித்து பாடகர் பாலக்காடு ஸ்ரீராம் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

ar rahman

அதில் அவர் கூறும் பொழுது திருப்புகழ் பாடலை ஒருமுறை நான் ஏ.ஆர் ரகுமானிடம் பாடி காட்டிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அதன் ராகத்தை கேட்டுக் கொண்டிருந்தார் ஏ ஆர் ரகுமான்.

இதை வைத்து படையப்பா படத்தில் ஒரு பாடலை வைப்போம் என்று கூறினார் பிறகு நான் சில நாட்களுக்கு பிறகு  திரும்ப வந்தபொழுது வெற்றி கொடி கட்டு பாடலுக்கான இசையை அமைத்திருந்தார். கொஞ்சம் திருப்புகழின் பாடலில் இருந்து மாற்றமாக செய்திருந்தாலும் அது சிறப்பாக இருந்தது என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் பாலக்காடு ஸ்ரீராம்.

To Top