Tamil Cinema News
கடுப்பான ஹாரிஸ் ஜெயராஜ்.. பதிலடி கொடுத்த ஏ.ஆர் ரகுமான்.!
சமீப காலங்களாகவே ஏ.ஐ குறித்த பேச்சுக்கள் அதிகமாக இருந்து வருகிறது. இசை துறையிலும் கூட ஏ.ஐயின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.
அதில் அவரிடம் இசையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறீர்களா? என கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த ஹாரிஸ் ஜெயராஜ் இத்தனை பாடகர்கள் இருக்கும்போது நான் ஏன் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டிருந்தார்.
மேலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் கலைஞர்களை அவமானப்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார். தமிழ் சினிமாவிற்கு முதன் முதலாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தான் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானை விமர்சித்து பாடகர் அபிஜீத் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது ஏ.ஆர் ரகுமான் தான் ஏ.ஐ தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார். இப்போ அவரால் நிறைய பாடகர்களுக்கு வாய்ப்புகளே இல்லாமல் போயிடுச்சு.
இந்த ஏ.ஐ ஐ ஆர்டிஃபிசியல் என சொல்லுங்கள். ஆனால் இண்டலிஜன்ஸ் என சொல்லாதீர்கள் என கூறியிருந்தார் அபிஜீத். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் இதற்கு பதிலளித்துள்ளார்.
அவர் இதுக்குறித்து கூறும்போது நான் இப்போது பல பாடகர்களை வைத்துதான் பாடல்களை உருவாக்குகிறேன். அவர்களுக்கு அதற்கான தொகையையும் கொடுத்து விடுகிறேன். 50க்கும் அதிகமான பாடகர்கள் என்னிடம் வேலைச் செய்கிறார்கள். ஏ.ஐ தொழில்நுட்பத்தில் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு.
அது பயன்படுத்துபவரை பொறுத்துதான் அமைகிறது என கூறியுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.
