News
இளையராஜாவை தாக்கி வீடியோ வெளியிட்டாரா ஏ.ஆர் ரகுமான்!.. மறைமுகமாக செய்த விஷயம்!..
கடந்த சில தினங்களாகவே தமிழ் சினிமாவில் இளையராஜா தனது பாடலுக்கு காப்புரிமை கேட்டது தொடர்பான விஷயங்கள்தான் இணையத்தில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இதை துவக்கி வைத்தது வைரமுத்து அவர்கள்தான் என கூற வேண்டும்.
ஒரு படத்தின் விழாவிற்கு வந்த வைரமுத்து அங்கு பேசும்போது ஒரு பாடலுக்கு இசை முக்கியமா மொழி முக்கியமா என கேட்டால் இரண்டுமே ஒரு பாடலுக்கு முக்கியம்தான். ஒன்று இல்லாவிட்டாலும் கூட அது பாடலாக மாறாது என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கங்கை அமரன் மிக கடுமையாக பேசியிருந்தார். இனி இளையராஜா குறித்து கங்கை அமரன் பேசக்கூடாது என கூறியிருந்தார் கங்கை அமரன்.

இதை எதிர்த்து வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் போட்டிருந்தார். இந்த நிலையில் தற்சமயம் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஏ.ஆர் ரகுமான் நடிகர் குமரி முத்து பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் குமரி முத்து தற்பெருமை கூடாது என கூறும் வகையில் உள்ள நாலடியார் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இது இளையராஜாவை குறிப்பிடும் வகையில் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட பதிவா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
