சைலண்டாக சம்பவம் செய்த அரண்மனை திரைப்படம்..! இந்த வருடத்தின் பெரும் வசூல் சாதனை..!

தமிழில் காமெடி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. ஆனால் அவ்வப்போது அவர் சில சீரியஸான கான்செப்ட்களிலும் திரைப்படங்கள் இயக்குவதுண்டு. அப்படி தற்சமயம் அவர் இயக்கி வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று இடையில் ஒரு சீசன் வந்தது. தில்லுக்கு துட்டு, பீட்சா, முனி என வரிசையாக பேய் படங்களாக வந்துக்கொண்டிருந்தப்போது இயக்குனர் சுந்தர் சியும் பேய் படங்கள் இயக்குவதில் களம் இறங்கினார்.

Social Media Bar

முனி மாதிரியான பேய் படங்களில் கெட்டவர்களால் கொலை செய்யப்பட்ட பேய் அவர்களை பழிவாங்குவதற்காக திரும்ப வருவதாக கதை இருக்கும். அவை பழிவாங்க கதாநாயகனே உதவுவதாக கதை இருக்கும். ஆனால் சுந்தர் சி இயக்கும் அரண்மனை படங்களில் கதாநாயகன் பேய்களிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றுவதாக கதை இருக்கும்.

முதல் பாகம் முதலே அரண்மனை படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அரண்மனைகளில் நடக்கும் கௌரவ கொலைகளை அடிப்படையாக கொண்டுதான் அரண்மனை படங்களின் கதை இருக்கும். அதே வகையில் வந்த அரண்மனை 4 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்சமயம் இந்த படம் உலக அளவில் 100 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்துள்ளது. இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் முதலில் 100 கோடி ஹிட் அடிக்கும் திரைப்படம் அரண்மனை 4 என கூறப்படுகிறது.