Connect with us

மொக்கை படம்னு தெரிஞ்சே கோர்த்து விட்டுட்டியே மச்சி!.. ஆர்யாவிற்கு கார்த்தி செய்த சம்பவம்!..

karthi arya

News

மொக்கை படம்னு தெரிஞ்சே கோர்த்து விட்டுட்டியே மச்சி!.. ஆர்யாவிற்கு கார்த்தி செய்த சம்பவம்!..

Social Media Bar

Actor karthi and Arya: சரியான திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது எப்போதுமே ஒரு நடிகருக்கு சவாலான விஷயமாகும். சரியான கதையை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அது அவர்களுக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கூட இருக்கிறது.

அப்படியான சம்பவம் ஒன்று ஆர்யாவிற்கு நடந்துள்ளது. நடிகர் கார்த்திக்கு ஒரு கதை நடிப்பதற்கு வந்துள்ளது. அந்த படத்தின் கதையை கேட்ட கார்த்தி இந்த கதை எனக்கு ஒத்து வராது. வேறு யாரையாவது கேட்டு கொள்ளுங்கள் என கூறிவிட்டார். ஏனெனில் கார்த்தி திரைப்படங்களின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

அதனால்தான் அவரால் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுக்க முடிகிறது என அவரது ரசிகர்கள் நினைக்கின்றனர். இந்த நிலையில் அதே கதையை எடுத்து கொண்டு இயக்குனர் ஆர்யாவிடம் சென்றுள்ளார். அந்த கதையை கேட்ட ஆர்யாவிற்கு படம் பிடித்துவிடவே அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்கிறார் ஆர்யா.

இதற்கு நடுவே கார்த்தியை ஒருமுறை சந்திக்கிறார் ஆர்யா. அப்போது கார்த்தி “மச்சி நீ அந்த படத்துல நடிக்கிறேன்னு கேள்விப்பட்டேன்” என கேட்டுள்ளார். ஆர்யாவும் அதற்கு ஆமாம் என கூறிவிட்டு நீ ஏன் அந்த படத்தை வேண்டாம் என்றாய் என கார்த்தியிடம் கேட்டிருக்கிறார்.

இல்லை அந்த கதை எனக்கு செட் ஆகாது என வெளிப்படையாக கூறிய கார்த்தி அந்த படத்தில் கொஞ்சம் கவனமாக நடிக்குமாறும் கூறியுள்ளார். அதன் பிறகு வெளியான அந்த படம் தோல்வியை கண்டது. இதை ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறிய ஆர்யா, “அப்போதே முடிவு செய்துவிட்டேன், இனி கார்த்தி நிராகரிக்கும் திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று” என கூறியுள்ளார்.

To Top