Bailvan ranganathan: மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஆறுமுகமானவர் இயக்குனர் அமீர். பெரும்பாலும் அமீர் இயக்கும் திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அவரது முதல் திரைப்படமான மௌனம் பேசியதே திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்த பிறகு அடுத்து அமீர் இயக்கிய திரைப்படம் பருத்திவீரன்.
பருத்திவீரன் திரைப்படம் முதன்முதலாக கிராமப்புறங்களில் இருக்கும் அடிதடி வாழ்க்கையை மிக இயல்பாக காட்டக்கூடியதாக இருந்ததால் அந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் அமீர் மதுரையை சேர்ந்தவர் என்பதால் அந்த விஷயங்களை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
ameer
அதன் பிறகு சில திரைப்படங்களில் அவர் இயக்குனராக பணிப்புரிந்த பிறகு வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக நடிகராகவும் நல்ல வரவேற்பை பெற துவங்கினார். தற்சமயம் கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அமீர் இயக்கும் இரண்டு திரைப்படங்களை ஜாபர் சாதிக் எனும் தயாரிப்பாளர் தயாரித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் மீது போதை கடத்தல் குற்றம் பதிவு செய்யப்பட்டு போலீசார் தற்சமயம் அவரை தேடி வருகின்றனர்.
bayilvan-ranganathan
இந்த நிலையில் அமீருக்கும் அவருக்கும் தொடர்பு இருக்குமா என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்த நிலையில் தனக்கும் அவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று அமீர் கூறி இருந்தார். இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறும் பொழுது அமீர் எந்த ஒரு விஷயத்தை பேசும் பொழுதும் அதற்கு துணையாக இஸ்லாத்தை இழுத்துக் கொள்கிறார்.
இந்த விஷயம் குறித்து பேசும் பொழுதும் இஸ்லாத்தைப் பொறுத்தவரை போதை பொருள், கடத்தல் இதெல்லாம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது எனவே நான் அதை செய்ய மாட்டேன் என பேசி இருக்கிறார். ஒருவேளை அந்த இந்த குற்றங்களில் அமீரும் இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் அப்பொழுது அமீர் என்ன செய்வார். இஸ்லாமிற்கு துரோகம் செய்தவராக அமீர் ஆகிவிட மாட்டாரா? என்று காட்டமாக பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.