Connect with us

ஐயா என்னை இன்னிக்கே வெளியே அனுப்பிடுங்கய்யா!.. பிக்பாஸிடம் கெஞ்சிய பவா.. என்ன காரணம்..

bawa chelladurai bigg boss tamil

Bigg Boss Tamil

ஐயா என்னை இன்னிக்கே வெளியே அனுப்பிடுங்கய்யா!.. பிக்பாஸிடம் கெஞ்சிய பவா.. என்ன காரணம்..

Social Media Bar

Biggboss Tamil season 7: பிக் பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷன் சுற்று நடந்தது. பொதுவாக பிக் பாஸ் தொடங்கி முதல் வாரத்தில் எலிமினேஷன் நடக்காது. ஏனெனில் அவர்கள் பிக் பாஸ் விளையாட்டை புரிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு வாரம் ஒதுக்கப்படும்.

ஆனால் இந்த முறை வீட்டிற்குள் சென்ற நாள் முதலே போட்டிகள் துவங்கி விட்டன. அந்த வகையில் நேற்று எலிமினேஷனில் பெரும்பான்மையானோர் பவா செல்லதுரை அவர்கள் தான்  போட்டியிலிருந்து நீக்கப்படுவார் என்று நினைத்தனர். ஆனால் அதற்கு மாறாக அனன்யா எலிமினேஷன் செய்யப்பட்டார்.

இருந்தாலும் பாவா செல்லதுரையும் பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு இருக்கும் உடல் நலப் பிரச்சினைகளும், பிக் பாஸில் இருக்கும் பிரச்சனைகளும் சேர்ந்து அவருக்கு சோர்வை ஏற்படுத்தி விட்டன.

எனவே நேற்று இரவு கன்ஃபஷன் அறைக்கு சென்ற பவா செல்லதுரை தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதுவும் இன்னும் அரை மணி நேரத்தில் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அப்படியெல்லாம் யாரையும் அனுப்பிவிட முடியாது உங்களுக்கு வேண்டுமானால் ஒரு மருத்துவரை நியமிக்கிறோம் என்று பிக் பாஸ் கூறியும் அதற்கு பவா செல்லதுரை ஒப்புக் கொள்ளாததால் பேசிவிட்டு கூறுகிறேன் என்று கூறியுள்ளார் பிக் பாஸ்.

போன சீசனில் வந்த உடனே ஜி பி முத்து சென்றது போலவே இந்த முறை பவா செல்லதுரை சீக்கிரமே சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Top